என்னதான் புதுசு புதுசா நிறைய பொருட்கள் வந்தாலும், பழசுக்கு எப்பவுமே மதிப்பு குறையாது. அதனால் தான் கீழடியில் கிடைக்கும் பண்டைய பொருட்கள் முதல் நெய்வேலி நிலக்கரி வரை அனைத்தும் முக்கியமானதாக பார்க்க முடிகிறது. ஏன் பழைய வாழ்க்கையை நினைத்து பார்த்து அந்த காலம் அது அது வசந்த காலம் என சொல்லுகிறோம். முன்பு எல்லாம் படம் பார்க்க தியேட்டர் சென்று டிக்கெட் எடுப்போம். ஆனால் தற்பொழுது ஆன்லைன் மூலமாக பெற்று செல்லும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் 50 வருடங்களுக்கு முன்பு வெளியான படத்தின் திரையரங்க டிக்கெட் கிடைத்துள்ளது என்றால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட ஓர் நிகழ்வு நடந்துள்ளது. 1975 ஆம் ஆண்டு அமிதாப் பஜன், சஞ்சீவ் குமார், ஹேமா மாலினி ஆகியோர் நடிப்பில் பாலிவுட் வட்டாரத்தில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் "ஷோலே". இந்த படம் அப்பொழுதே வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ஹிட்டடித்த படம் என்பார்கள்.
இதையும் படிங்க: பாலுமகேந்திராவை புகழ்ந்து தள்ளிய இளையராஜா..! அவரும் சைலன்ட் அவர் படமும் சைலன்ட் - வெற்றிமாறன் நெகிழ்ச்சி..!

சுமார் ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை முதல் மூன்று நாட்கள் திரையரங்கில் காண ஒருவரும் வரவில்லை, பின் இப்படத்தின் பாடல் அனைவருக்கும் பிடிக்க, தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் அந்த காலத்திலேயே ரூ.30 கோடியை நெருங்கி சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிக்கெட்டின் புகைப்படம் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அதில் படத்தின் தரை டிக்கெட் 1.50 ரூபாய், பென்ஞ் டிக்கெட் 2 ரூபாய், பால்கனி டிக்கெட் 3 ரூபாய்க்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த காசுக்கு இப்பொழுது தியேட்டரில் காலை கூட வைக்க முடியாது என கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏற்காட்டிற்கு அழைத்த ஹீரோ... என் வாழ்க்கையே நாசமா போச்சு... நடிகை ஆவேசம்!