கடந்த வாரம் மட்டும் ஓடிடியில் பத்து படங்கள் வெளியாகின, அதில் குறிப்பாக தியேட்டரில் AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம் தயாரிப்பில் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான், பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் இணைப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படமும், வண்டர்பார் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்.கே. புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் ரெட் ஜெயிட் மூவிஸால் உருவாக்கிய "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்ற திரைப்படமும் வெளியானது,

அதனை தொடர்ந்து, ஜனவரி 10-ந் தேதி வெளியான 'வணங்கான்' திரைப்படம் ஓ.டி.டியான "டென்ட்கொட்டா" தளத்திலும், மதுவால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் நகைச்சுவை கலந்த படமான 'பாட்டல் ராதா' திரைப்படம் ஓ.டி.டியான "ஆஹா தமிழ்" தளத்திலும், ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த 'டாகு மகாராஜ்' திரைப்படம் ஓ.டி.டியான "நெட்பிளிக்ஸ்" தளத்திலும், இயக்குநர் கபீஸ் இயக்கியத்தில் நகைச்சுவை கலந்த வெப் தொடரான "ஆபிஸ்" தொடர் ஓ.டி.டியான "ஜியோ ஹாட்ஸ்டார்" தளத்திலும், டிஜி பிலிம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் உருவான 'செல்பி' திரைப்படம் ஓ.டி.டியான "சிம்பிலி சவுத்" தளத்திலும், டிசம்பர் வெளியாகி ரூ.3,200 கோடி வசூல் செய்த 'முபாசா தி லயன் கிங்' திரைப்படம் ஓ.டி.டியான "அமேசான் பிரைம்" தளத்திலும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் சாட்சி கையெழுத்துப் போடுபவர்கள் நிலைமையை விவரிக்கும் 'சாட்சி பெருமாள்' திரைப்படம் ஓ.டி.டியான "டென்ட்கொட்டா" தளத்திலும், "தி ஒயிட் லோட்டஸ் சீசன் 3" தொடர் "ஜியோ ஹாட்ஸ்டார்" தளத்திலும் வெளியானது.
இதையும் படிங்க: ஓடிடியில் கலக்கும் மம்மூட்டி மகன்...! பிச்சுக்கிட்டு ஓடும் 'லக்கி பாஸ்கர்'..!

இதனை தொடர்ந்து தற்பொழுது வருகின்ற வாரத்தில் ஏழு திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது. அந்த வகையில் ராஜேஷ்வர் காளிசுவாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான 'குடும்பஸ்தன்' திரைப்படம் வசூலை வாரி குவித்து வெற்றி படமாக மாறி உள்ளது. இந்நிலையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'குடும்பஸ்தன்' திரைப்படம் ஓடிடி தளமான " ஜீ5"ல் இன்று ரிலீஸாகிறது.

புஷ்கர் - காயத்ரி கதையில் சஸ்பென்ஸ் திரில்லராக வெளியான இந்த "சுழல்"வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் முதல் சீசனில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது சீசன் "அமேசான் ப்ரைம்" தளத்தில் இன்று முதல் ஒளிப்பரப்பாகிறது.

அதேபோல், கலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் எழில் பெரியவேதி எழுதி இயக்கத்தில், சங்கீதா கல்யாண், குரு ராஜேந்திரன், சாம்ராட் சுரேஷ், புகழ் மகேந்திரன், வி. பிரேம்நாத் நடிப்பில் உருவான ’பராரி’ திரைப்படம் "ஆஹா" ஓடிடி தளத்தில் ரிலீஸாகியிருக்கிறது.

புளூ வேல் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் குரு கார்த்திகேயன் எழுதி இயக்கிய ஹாரர் த்ரில்லர் படமான 'பிளட் அண்டு பிளாக்’ திரைப்பத்தில் சுகி விஜய் மற்றும் யானி ஜாக்சன் நடித்துள்ளனர். இந்த 'பிளட் அண்டு பிளாக்’ படம் தற்பொழுது 'டென்ட்கொட்டா' ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.

சிம்ப்ளி சவுத் ஓடிடியில் ‘பியாண்ட் தி 7 சீஸ்’ என்ற படமும் வெளியாகிறது.அத்துடன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், அனில் ரவிபுடி இயக்கத்தில், வெங்கடேஷ் , மீனாட்சி சவுத்ரி , ஐஸ்வர்யா ராஜேஷ், சர்வதாமன் டி. பானர்ஜி , ஸ்ரீனிவாச ரெட்டி , பி. சாய் குமார் , உபேந்திரா லிமாயே , நரேஷ் , வி.டி.வி கணேஷ் மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசராலா ஆகியோர் நடித்த 'சங்கராந்திகி வஸ்துனம்' என்ற படமும் "ஜீ5" ஓடிடியில் வரும் மார்ச் 1 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இதனையடுத்து, மகிழ் திருமேனி இயக்கத்தில் ஏகே, திரிஷா, அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் பலர் நடிப்பில் வெளியான அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 3 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்களை பார்த்து ரசியுங்கள்.
இதையும் படிங்க: திரைக்கு வந்து சில மாதங்களே ஆன... புத்தம் புதிய திரைப்படங்கள் இப்போது ஓடிடியில்..!