தமிழில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான "கனா காணும் காலங்கள்" தொடரின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் கவின். பின்பு "சரவணன் மீனாட்சி-2" என்ற தொடரில் 'வேட்டையனாக' அவதாரம் எடுத்து பல பெண்களின் ஆசை நாயகனாக மாறினார். இதனைத் தொடர்ந்து, ராஜ் எஸ்.ஆர். பிரபாகரனின் இயக்கத்தில் உருவான 'சத்ரியன்' படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார், மேலும் சிவா இயக்கத்தில் 'நட்புனா என்னன்னு தெரியுமா' என்ற படத்தில் நடித்தார்.

இப்படி சின்னத்திரையில் நடித்து பலரது கனவு நாயகனாக மாறிய கவின், ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் தோல்வியை சந்தித்தார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு, "வி ஆர் த பாய்ஸ்" என்ற பெயரை உருவாக்கி, பிக் பாஸில் சாக்ஷி, அபிராமி, வனிதா முதலானோரின் சாபங்களை வாங்கி குவித்த கவின், அதே வீட்டில் சாக்ஷி, லாஸ்ட்லியா போன்றோரின் மனதை கொள்ளையடித்தார். ஆரம்பத்தில் இவரது செயல் ரசிகர்களுக்கு கோபத்தை வரவழைத்தாலும், பின் பணப்பெட்டியை எடுத்து வெளியே சென்ற பின் அவர் மீது அனைவருக்கும் தனி மரியாதை எழுந்தது.
இதையும் படிங்க: மாஸ்க் போட்டுக் கொண்ட கவின்.. வில்லியாக மிரட்டும் ஆண்ட்ரியா...

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கவின், அடுத்தடுத்து நடித்த படங்கள் வெற்றியை தேடித் தந்தது, குறிப்பாக லிஃப்ட், டாடா, ஸ்டார், பிளடி பக்கர் போன்ற படங்களை நடித்து தனக்கென ரசிகர்களை பிடித்துள்ளார். குறிப்பாக "டாடா" படத்தில், தாயை பிரிந்த தனது குழந்தையை தகப்பனாக இருந்து எப்படி வளர்க்க வேண்டும் என்பதை காமித்து இருப்பார், புதுவிதமான இப்படம் அவருக்கு வெற்றியை தேடி தந்தது. லிப் படமும் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது, மேலும் "ஸ்டார்" படத்தில், நடிப்பின் திறமையை காமித்து அசத்தியிருப்பார்.

கவினுக்கு தற்பொழுது திருமணமான நிலையில், அவரைப் பற்றி தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் எனவும், தான் பேசினால் அவருடைய திருமண பந்தத்திற்கும் அப்பெண்ணின் குடும்பத்திற்கும் மனவருத்தம் ஏற்படும் என்பதால் லாஸ்ட்லியா இனி அவரைப் பற்றி எந்த கேள்விகளும் கேட்க வேண்டாம் என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடன இயக்குனர் ஆன சதிஷ் இயக்கத்தில் உருவாகும் 'கிஸ்' என்ற படத்தில் கவின் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கவின் ஆறாவது படமான 'மாஸ்க்' படத்தை வெற்றிமாறன் தயாரிப்பில், அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கான, பஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டு உள்ளனர். அதில் நெகட்டிவ் ரோலில் ஆண்ட்ரியாவும் பாசிட்டிவ் ரோலில் கவின் இருப்பதும் தெளிவாக தெரிகிறது.

இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள், இந்த படத்தில் கவின் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என புகழாரம் சூட்டி இருக்கின்றனர். ஆனாலும் மாஸ்க் படம் மாஸாக இருக்குமா அல்லது தமாஸாக மாறுமா என்பது படத்தின் ரிலீஸில் தான் தெரியும் என கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: லாஸ்லியாவை விடாமல் துரத்தும் கவின்..! வேதனையின் உச்சத்தில் நடிகை குமுறல்..!