தமிழ் திரையுலகில் என்ன தான் மிர்னா மேனன் நடிகையாக இருந்தாலும், இன்றளவும் அனைவராலும் ஜெயிலரின் மருமகளாகவே பார்க்கப்படுகிறார். உதாரணமாக ஜெயிலரின் மருமகளான மிர்னாவை ஒருவர் பார்த்ததற்கே தலையை வெட்டி விடுவார் ரஜினி. அந்த அளவிற்கு கொள்ளை கொள்ளும் அழகை உடையவர்.

தற்பொழுது ஜெயிலரின் மருமகள் என்பதை மறந்து கிளாமர் புகைப்படங்களை உலா வர வைத்து இருக்கிறார்.

முக வடிவிலும், கண்களின் காந்த பார்வையிலும் ஆளையே மயக்கும் பேரழகு தான் மிர்னா. ஆனாலும் அழகும் ஆபத்துதான் என்பதற்கு உதாரணமும் இவர் தான். காரணம், தான் நடிக்க வந்த காலத்தில் முதல் படம் ஒப்பந்தம் ஆன பொழுதே, இயக்குநரால் துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும், காவல்துறையினரிடமிருந்தோ, திரைப்பட அதிகாரிகளிடமிருந்தோ எந்த ஆதரவும் கிடைக்காததால் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் முடிவை எடுத்து, பின் கைவிட்டார். அதன் பின் தனது பெயரை அதிதி மேனன் என மாற்றி கொண்டார்.
இதையும் படிங்க: என்ன "ஜெயிலர்" சவுண்ட் "ஜப்பான்" வரைக்கும் இருக்கு..! ஜப்பானில் தடம் பதித்த ஜெயிலர்.....ரிலீஸ் எப்போ..?

அதன் பின், மலையாளத் திரையுலகில் மோகன்லால் நடிப்பில் உருவான "பிக் பிரதர்" படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, கே.எம்.சர்ஜுனின் "புர்கா" படத்தில் மிர்னா கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், இத்தாஹ் தவறாக சித்தரித்ததற்காக இந்த படம் முஸ்லிம்களிடமிருந்து போராட்டங்களையும் கோபத்தையும் பெற்றது.

இதனை அடுத்து, ஆதி சாய்குமாரின் "கிரேஸி ஃபெலோ" என்ற படத்திலும் அல்லரி நரேஷின் "உக்ரம்" ஆகிய படங்களிலும் மிர்னா கதாநாயகியாக நடித்தார்.

இப்படங்களுக்கு பின் மிர்னாவுக்கு ஜேக்பார்ட் அடித்த படம் தான் ஜெயிலர். இப்படத்தில் ரஜினி உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை சாதுர்யமாக பயன்படுத்தி கொண்ட மிர்னா, தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளையும் பெற்று இன்று அனைவரும் விரும்பும் கதாநாயகியாக மாறி இருக்கிறார்.

இந்த நிலையில், அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடும் மிர்ணாவை ஃபாலோ செய்யும் ரசிகர்களும் அதிகம்.
இதையும் படிங்க: தியேட்டர் உரிமையாளருக்கு சப்தம் பட இயக்குநர் வேண்டுகோள்..! பார்வையாளர்களை கவர இப்படி ஒரு முயற்சியா - ரசிகர்கள் கிண்டல்..!