தமிழ் திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுவரை 175 படங்களுக்கு மேல் நடித்த ரஜினிகாந்த் வயசானாலும் இன்னும் அவருடைய நடிப்பும் ஸ்டைலும் மாறாதது போல இன்றும் விறுவிறுப்பிலும் சிரிப்பிலும் தனது இளமையை ரசிகர்கள் மத்தியில் நிரூபித்துக் கொண்டு வருகிறார்.

இப்படி இருக்க ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக கூறி அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் பிஜேபிக்கு ஆதரவான அவரது அரசியல் பிரச்சாரங்களும் பேச்சுக்களும் மக்கள் மத்தியில் அவர் மீதான எதிர்பார்ப்பையும் அன்பையும் உடைத்ததாக தெரியவர தனது ரசிகர்களுக்காக அரசியல் வேண்டாம் என்று அதிலிருந்து விலகி சென்றார். அரசியலில் இருந்து விலகினாலும் அவ்வப்போது நாடுகளில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளை குறித்தும் பேசி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் தனது ரசிகர்களுக்காக மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2-ல் சிவராஜ்குமார்..! அவரே கொடுத்த மாஸ் அப்டேட்..!

இப்படி இருக்க தற்பொழுது அவர் நடித்து வந்த ஜெயிலர் 2 படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, காஷ்மீர் தீவிரவாத பிரச்சனைகளை குறித்து தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும், இந்த தாக்குதலுக்கு மத்திய அரசு தக்க பதிலடி கொடுக்கும் எனவும் கூறி இருந்தார்.
இப்படி இருக்க தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரங்களை சூடு பறக்க செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில், திடீரென நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் அமைச்சருடைய வீட்டிற்கே சென்று சந்தித்து உள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் தலைமை நிலை செயலாளருமான எஸ்பி வேலுமணியின் மகன் விஜய் விகாஸ் - தீக்ஷனா மணமக்களுக்கு கோவை தனியார் மண்டபத்தில் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது நடிகர் ரஜினிக்கும் எஸ்.பி வேலுமணி தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் அவரது இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் சூட்டிங் எல்லாம் முடிந்து தற்பொழுது ஃப்ரீயாக உள்ள ரஜினிகாந்த் இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத்திற்கு சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்களுக்கு ராகவேந்திரா சுவாமி உருவப்படத்தை பரிசாக வழங்கினார். வீடு தேடி வாழ்த்து தெரிவிக்க வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது மகன் விஜய் விகாஸ் மருமகள் தீக்ஷனா ஆகியோர் மலர் கொத்து வரவேற்று உபசரணை செய்து உள்ளனர்.
என்னதான் நடிகர் ரஜினிகாந்த் திருமண வாழ்த்து கூற சென்று இருந்தாலும், அதிமுகவின் முன்னாள் அமைச்சருடைய வீட்டிற்கே சென்றது அரசியல் விமர்சகர்கள் இடையே கேள்வியை எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: ரஜினி மீதான காதல் குற்றச்சாட்டு...! நீண்ட நாள் கிசு கிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை லதா..!