கொளத்தூர் தொகுதியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாலை நேர சிறப்பு வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட இந்த மாலை நேர சிறப்பு வகுப்பான முதல்வர் கல்விச்சோலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜமாலியா குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்ட வீடுகளை 130 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இதையும் படிங்க: 2026ல் திராவிட மாடல் 2.0..! காவல்துறைக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தேர்தலுக்கான பணிகளை நாங்கள் ஏற்கனவே தீவிரப்படுத்தி விட்டோம் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: இது மணிப்பூர் இல்ல.., தமிழ்நாடு..! பேரவையில் திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வர்..!