அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த படம், 'டிராகன்'. இப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியானது. மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம், ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கயாடு லோஹர் நடித்திருந்தார். அவருடைய நடிப்பு, நடனம், காட்சி அமைப்புகள் என அனைத்திலும் ஸ்கோர் செய்தார்.

இதனால், இளைஞர்கள் மத்தியிலும் கயாடு லோஹருக்கு ஏக வரவேற்பு. இதையடுத்து ரசிகர்கள் கயாடுவின் வீடியோக்களை அதிகம் பகிரத் தொடங்கினர். இதனால் சோஷியல் மீடியாவில் கயாடுவின் வீடியோக்கள் வரிசைக் கட்டுகின்றன. அவருடைய வீடியோக்களும் லட்சக்கணக்கில் வியூவ்ஸ்களை அள்ளி வருகின்றன. கயாடுவுக்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பு கோடம்பாக்கத்து இயக்குநர்களையும் யோசிக்க வைத்துள்ளது. எனவே, கயாடுவை படங்களில் நடிக்க வைக்க அணுகி வருகிறார்கள்.

தற்போது அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’, காளிதாஸ் நடிக்கும் ‘நிலா வரும் வேளை’, விஸ்வாக் சென் நடிக்கும் ‘ஃபங்கி’, நிவின் பாலி நடிக்கும் ‘தாரம்’ என நான்கு படங்கள் கயாடுவுக்கு வேகமாக புக் ஆகியுள்ளன. மேலும் ரவி தேஜாவுடன் ஒரு படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே இந்த ஆண்டு வரை தமிழில் கயாடு பிஸியாகிவிட்டார். மேலும் தமிழில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தில் நடிக்கவும் கயாடுவுக்கு வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக கோடம்பாக்கத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இந்த ஆண்டு வெளியான படங்களில் இத்தனை படம் தான் ஹிட்-ஆ..! என்ன கொடுமை சரவணன் இது..!
இதையும் படிங்க: சேலம் மக்களுக்கு ஓர் நற்செய்தி..சேலம் மண்ணில் கால் பதிக்கும் நடிகை கயாடு லோஹர்...!