சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து, தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றி வாகை சூடியவர் பிரியா பவானி ஷங்கர்.

இயக்குனர் ரத்தக்குமார் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார்.

இதையும் படிங்க: 20 வயசுலயே இப்படியா? கவர்ச்சியில் கிரணுக்கே டஃப் கொடுக்க ஆரம்பித்த அனிகா சுரேந்திரன்!
இதைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தியின் மாமன் மகளாக 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில், பாவாடை தாவணி அழகில் ரசிகர்களை மயங்கினார். மான்ஸ்டர் படத்தில் அதிரடியாக நடிகர் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடி போட்டார் பிரியா பவானி ஷங்கர்.

இதைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தியின் மாமன் மகளாக 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில், பாவாடை தாவணி அழகில் ரசிகர்களை மயங்கினார். மான்ஸ்டர் படத்தில் அதிரடியாக நடிகர் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடி போட்டார் பிரியா பவானி ஷங்கர்.

அதேபோல் 2022, 2023, ஆகிய வருடங்களில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுத்தார்.

மேலும் இந்த ஆண்டு மட்டும் பிரியா பவானி ஷங்கர் சுமார் 7 படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படுதோல்வியை சந்தித்தாலும், டிமான்டி காலனி 2 திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது.

அடுத்ததாக இவரின் கைவசம் இந்தியன் 3, திரைப்படம் மட்டுமே உள்ளது. மேலும் தன்னுடைய திருமணம் குறித்த அறிவிப்பையும் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பிரியா பவானி சங்கர் வெளிப்படுத்தி விட்டதால், காதலரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகுவாரா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று, காதலருடன் சில் செய்து வரும் பிரியா, இந்த ஆண்டு தன்னுடைய 35-ஆவது பிறந்தநாளையும் காதலருடன் கொண்டாடி வருகிறார் என்றே கூறப்படுகிறது. ரசிகர்களும் இன்றைய பார்த் டே பேபியான ப்ரியா பவானி ஷங்கருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இவருடைய முரட்டு அழகில்... சமீபத்தில் வெளியான சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. அந்த கூல் கிளக்ஸ் இதோ..

இதையும் படிங்க: தமன்னாவுடன் பார்ட்டி; மகனுடன் நீச்சல் உடையில் லூட்டி! காஜல் பகிர்ந்த டிசம்பர் ஸ்பெஷல் போட்டோஸ்!