''ஐ.பி.எஸ்., ஆக இருந்த அண்ணாமலை தமிழகத்தை வழிநடத்த தகுதியானவர். அவருக்கு சிறப்பான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்'' என ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்தார்.

இது குறித்து தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் பவன் கல்யாண் ''ஹிந்தி தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஒரு நடிகராக இருந்துவிட்டு உடனடியாக முதல்வர் ஆக முடியாது. அப்படி நடப்பது அரிதிலும் அரிது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலிமையான தலைவர்.
இதையும் படிங்க: 1000 ஆடுகளை அறுத்தால் பக்ரீத்.. ஒரே ஒரு ஆட்டை அறுத்தால் தேர்தல்… அண்ணாமலையை வம்பிழுக்கும் செந்தில் பாலாஜி..!

எம்.ஜி.ஆர்., தோற்றுவித்த அ.தி.மு.க., கட்சி சிறப்பாக இருக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க., வந்தால் மகிழ்ச்சி. தே.ஜ., கூட்டணியில் ஏற்கனவே பொருந்திய கட்சி அ.தி.மு.க., மீண்டும் பொருந்தலாமே.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை பாலோ செய்து வருகிறேன். அவர் மிகச்சிறந்த தலைவர். ஐ.பி.எஸ்., ஆக இருந்த அண்ணாமலை தமிழகத்தை வழிநடத்த தகுதியானவர். அவருக்கு சிறப்பான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
பல தி.மு.க., எம்.பி.,க்கள் ஹிந்தியில் பேசுகிறார்கள். ஆனால், பொதுமக்கள் முன் வந்து ஹிந்தியை எதிர்க்கிறார்கள். கண்மூடித்தனமாக எதிர்ப்பதை நான் விரும்பவில்லை. காலம் மாறிவிட்டது. தேசிய கல்வி கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை.ஆனால் திணித்தால் நானே எதிர்ப்பேன்'' எனத் தெரிவித்துள்ளார் பவன் கல்யாண்.
இதையும் படிங்க: கூப்பிட்டா நாங்களும் வந்துருப்போம்... டிவிஸ்ட் அடித்த அண்ணாமலை!!