மலையாள திரையுலகில் வெளியாகி, தற்பொழுது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்ற திரைப்படம் "பனி". இப்படத்தின் கதாநாயகியை இருவர் சீரழித்ததால் அவரது கணவர், இருவரையும் தேடி பிடித்து, வெடி பொருளை வைத்து அவர்கள் உடலை சிதைப்பார். இப்படி இந்த திரைபடம் பயங்கர ஹிட் கொடுத்தாலும், இப்படத்தில் தனது மௌனமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் நடிகை அபிநயா.

திரையுலகில் அழகை மட்டுமே முன்னோடியாக வைத்து நாயகிகளாக மாறி வலம் வருபவர்கள் மத்தியில், தனது திறமையை மட்டுமே நம்பி அதனை உழைப்பாக மாற்றி இன்று வெற்றி அடைந்த நாயகிதான் அபிநயா. காரணம், இவருக்கு சரியாக பேச வராது அதேபோல் காது கேட்கும் திறன் குறைபாடும் உடையவர். இப்படிப்பட்ட இவர் தன்னுடைய திரைவாழ்க்கையை 'நாடோடிகள்' திரைப்படத்தில் தொடங்கினார். இப்படம் வெற்றிக்கு பிறகு, அதேதிரைப்படத்தின் மொழி மாற்றங்களிலும் நடித்து, தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.
இதையும் படிங்க: ராஜமாதாவாக மாறிய துஷாரா விஜயன்... ஆளை மயக்கும் பேரழகில் க்யூட் போஸ்...!

இவர் திரையுலகிற்கு வர காரணம் இருவர். ஒன்று இவரது தந்தை இரண்டாவதாக சிறந்த இயக்குநர் ஒருவர். அபிநயாவின் தந்தை இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் "ஸ்டாலின்" என்ற தெலுங்கு திரைப்படத்தில் பாதுகாப்பு காவலாளியாக நடித்து கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த அபிநயாவை கவனித்த ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் சசிக்குமாரிடம் அவரை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து,சசிக்குமார் தயாரிப்பில், இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான "நாடோடிகள்" திரைப்படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடிக்க அபிக்கு வாய்ப்புகிதைத்தது.

அத்திரைப்படம் இவருக்கு வெற்றியைத் தேடி தந்ததை தொடர்ந்து, அதனுடைய மொழிமாற்றமான "சம்போ சிவ சம்போ" திரைப்படத்திலும் நடித்தார், பிறகு கன்னடத்தில் உருவான மொழிமாற்றமான "ஹுத்துகாரு" என்ற திரைப்படத்திலும் நடித்தார். இவருடைய நடிப்பின் திறமைக்கு பரிசாக இதுவரை, இரண்டு பிலிம்பேர் விருதுகளை 'நாடோடிகள் மற்றும் சம்போ சிவ சம்போ' திரைப்படங்களுக்காக பெற்றார்.

இதனை அடுத்து, 2010-ம் ஆண்டு சசிக்குமார் இயக்கத்தில் வெளியான "ஈசன்" திரைப்படத்திலும், 2011-ம் ஆண்டு, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த "ஏழாம் அறிவு" திரைப்படத்திலும், தி ரிப்போர்ட்டர் என்ற மலையாளத் திரைப்படத்திலும், ஜுனியர் என்.டி.ஆருடன், தெலுங்கு திரைப்படமான "தம்மு" என பல படங்களில் நடித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, அபிநாயாவுக்கு எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் தொடந்து கேட்டு கொண்டிருக்க, தான் 15 வருடங்களாக ஒருவரை காதலித்து வருவதாகவும், கூடிய விரைவில் அவருடன் திருமணம் நடைபெறும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், நடிகை அபிநயாவுக்கு தனது காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதனை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் மோதிரம் மாற்றிய இருவரின் கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், மக்களுக்கு கூட காண்பிக்காமல் தனது காதலனை பொக்கிஷமாக மறைத்து வைத்திருக்கிறார் அபிநயா,கண்டிப்பாக மாப்பிள்ளை கொடுத்து வைத்தவர் தான் என வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: குஷ்பூவுக்காக 'மொட்டை பாஸ்' ஆக மாறிய சுந்தர்.சி...! மனைவிக்காக சிறப்பு வேண்டுதல்..!