நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நிச்சல் திரைப்படத்தில் நடிகர் சதிஷ் சிவாவை பார்த்து, மச்சா உன் பிரச்சனைக்கு உன்பெயரை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்பார். அதற்காக சிவாவும் நியூமராலஜியாளரிடம் சென்று தனது பெயரை மாற்றி கொள்வார். அந்த சம்பவத்தை போல ஒரு சம்பவம் தெலுங்கு திரையுலக நடிகருக்கு நிகழ்ந்துள்ளது.
நம் அனைவருக்கும் "புஷ்பா என்றால் ஃபிளவருன்னு நினைச்சியா... புஷ்பான்னா ஃபயரு... வேல்டு ஃபயரு" என்ற டயலாக்கை கேட்டால் உடனே நினைவுக்கு வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். அந்த அளவிற்கு புஷ்பா திரைப்படம் அவரை இந்தியா மட்டுமல்லாது உலகில் உள்ள அனைவரும் அறியும்படி செய்துள்ளது.

பார்க்க ஹேன்சமாக இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுனை பெண்கள் மட்டும் அல்லாது ஆண்களும் விரும்பும் அளவுக்கு அவரது நடிப்பும் சண்டை போடும் திறமையும் கட்டுமஸ்தான் உடம்பும் அனைவரையும் மயக்க செய்துள்ளது. அப்படிப்பட்ட அல்லு அர்ஜுன் 1985ம் ஆண்டு வெளியான "விஜேதா" என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், 2001ம் ஆண்டு வெளியான "டாடி" படத்தில் நடனக் கலைஞராகவும் நடித்தார்.
பிறகு, 2003ம் ஆண்டு வெளியான "கங்கோத்ரி" எனும் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் 2004ம் ஆண்டு இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான "ஆர்யா" என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக "நந்தி சிறப்பு ஜூரி" விருதைப் பெற்று பல இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
இதையும் படிங்க: "ஊ சொல்றியா மாமா" பாடலுக்கு முதலில் கமிட்டான நடிகை இவங்கதான்.. ரகசியத்தை உடைத்த இயக்குநர்..!

இதுவரை விஜெதா, சிப்பிக்குள் முத்து, டாடி, கங்கோத்ரி, ஆர்யா, பன்னி, ஹேப்பி, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், பருகு, ஆர்யா 2, வருடு, வேதம், பத்ரிநாத், சுலாயி, இதரம்மாயில்தோ, ஐ எம் தட் சேஞ்சு, யுவடு, ரேஸ் குர்ராம், த/பெ சத்தியமூர்த்தி, ருத்ரமாதேவி, சரைநொடு, டிஜே, நா பேரு சூர்யா, அலா வைகுந்தபுரம்லோ, புஷ்பா, புஷ்பா 2 முதலிய படங்களில் நடித்து உள்ளார்.

அல்லு அர்ஜுனின் இத்தனை படங்களை காட்டிலும் 2024ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் அவருக்கு பெரிய புகழையும் வருத்தத்தையும் தேடி தந்தது . புஷ்பா இரண்டாம் பாகத்தில் கடத்தலுக்கு தடைகளை கொண்டு வரும் சகாவத்தை மீறி வெளிநாடுகளுக்கு செம்மரத்தை கடத்துவது. தனது மனைவி கேட்டதற்காக முதலமைச்சருடன் ஒரு போட்டோ எடுக்க புதிய முதலமைச்சரை கொண்டு வருவது. கடைசியில் தனது தங்கையை காப்பாற்ற அடிவாங்கி, தனது குடும்பத்துடன் இணைவது போன்று காண்பிக்கப்பட்டு இப்படம் முடிவடைந்திருக்கும்.

இந்த சூழலில், தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த புஷ்பா 2 திரைப்படம் இந்தியாவை தாண்டி போர்ச்சுகீஸ், இந்தோனேசியா, போலிஷ் (போலந்து), ஸ்பானிஷ் மற்றும் தாய்லாந்து என ஐந்து மொழிகளில் ஆங் சப் என்ற டைட்டில்களுடன் ஓடிடியில் வெளியாகி வெற்றியடைந்தது. இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ.1871 ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது புஷ்பா2.

இப்படியிருக்க, புஷ்பா 2 படம் திரையிடப்படும் பொழுது தியேட்டருக்கு வந்த அல்லு அர்ஜுனை பார்க்க கூட்டம் அதிகரித்தது. அந்த கூட்டத்தில் சிக்கி ஒரு பெண் உயிரிழக்க, அப்பெண்ணின் மரணத்திற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என கூறி அவரை கோர்ட் கேஸ் என அலையவிட்டனர் அரசியல் கட்சியினர் மற்றும் சில சமூக அமைப்புகள். இதனால் மன வருத்தத்தில் இருந்த அல்லு அர்ஜுன் தனது பெயரால் தான் இந்த பிரச்னை என எண்ணி நியூமராலஜி முறைப்படி தனது பெயரை மாற்ற திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, அவரது பெயரில் இரண்டு U மற்றும் இரண்டு N ஆகியவற்றை அவர் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார். பல நடிகர்கள் தங்கள் பெயர்களின் எழுத்துக்களை மாற்றி இருக்கின்றனர். அந்த லிஸ்டில் அல்லு அர்ஜுனும் தற்போது இணைந்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: அட்லீயுடன் இணையும் அல்லு அர்ஜூன்… அடேங்கப்பா.. இவ்வளவு சம்பளமா..?