தமிழ் திரையுலகில் குட்டி குஷ்பூ என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை சமந்தா. இன்று தன் வாழ்வின் பல சிக்கல்களை எதிர்கொண்டு பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்று வரும் சமந்தா, தான் நிற்கும் மேடைகளிலும், தன் கால் பட்ட இடங்களிலும் பெண்களின் தைரியம் மற்றும் மன உறுதியை பற்றி அதிகமாக பேசி வருகிறார். அந்த அளவிற்கு தன் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து மீண்டு வந்துள்ளார் நடிகை சமந்தா.

இப்படி, எல்லோருக்கும் தெரிந்த நடிகை சமந்தாவின் உண்மையான பெயர் "யசோதா" என்பது எத்தனை பேருக்கு தெரியும். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான "ஏ மாய சேசாவே" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
இப்படத்தில் நடித்த நடிகை சமந்தாவுக்கு "சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. இப்படி இருக்க, நாக சைத்தன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணமுறிவு ஏற்பட்டு பிரிந்த நடிகை சமந்தா, அதன் பின் பல வருடங்களாக திரையுலகின் பக்கம் அடியெடுத்து வைக்க வில்லை.
இதையும் படிங்க: பிரம்மாண்டமாக தயாராகும் அட்லீ படம்..! லண்டன் நிறுவனத்தை வாய்பிளக்க வைத்த ஸ்கிரிப்ட்..!

நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் மணமுறிவு சோகத்தை கலைத்த சமந்தா, இனி சினிமா தான் என் முதல் காதலன் என கூறி தற்பொழுது சினிமாவில் கலக்கி வருகிறார். இந்த சூழலில் நடிகை சமந்தா நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வித்தியாசமான வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார்.

அதன்படி, புஷ்பா படத்தின் மாஸ் ஹீரோவான அல்லு அர்ஜுனை வைத்து படம் எடுக்க இருப்பதாக சமீபகாலமாக கூறிவந்தார் இயக்குனர் அட்லீ. மேலும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை பிரியங்கா சோப்ரா என அனைவரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது.

இயக்குனர் அட்லீயின் 6வது படமும் அல்லு அர்ஜுனின் 22வது படமுமான இப்படத்தை பிரபல சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமான பட்ஜெட்டில் ரூ.600கோடி செலவில் தயாரிக்க முன்வந்துள்ளது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் லண்டனில் LOLA VFXல் நடைபெற்று வருகிறது. அங்குள்ள முக்கிய நபர்கள் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்துவிட்டு மிரண்டுபோயுள்ளனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

LOLA VFX அவெஞ்சர்ஸ், டெர்மினேட்டர், அவதார் போன்ற மாபெரும் படங்களுக்கு பணிபுரிந்துள்ளனர். LOLA VFXல் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் தங்களது படத்திற்காக முன் தயாரிப்பு பணிகள் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகளையும் இந்த அறிவிப்பு வீடியோவில் காட்டியுள்ளனர். இதனைபார்த்த சமந்தா அல்லு அர்ஜுனை பாராட்டி பதிவிட்டு உள்ளார். அதில், இந்த அபாரமான நடிகரின் வளர்ச்சியை காண பொறுமையாக இருக்க முடியவில்லை.
திரையில் உங்களைப் பார்த்தாலே இன்ப அதிர்ச்சிதான். உங்களது எல்லைகளை தாண்டி ஒவ்வொரு முறையும் அளிக்கும் பங்களிப்பு அபாரம். உங்களின் ஆரோக்கியம் ஆற்றல் குறையாமல் இருந்து நீங்கள் நேசிக்கும் காரியங்களை தொடர்ந்து சிறப்பாக செய்ய இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் சமந்தா.

அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதுடன் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அல்லு அர்ஜுனுக்கு ஜோடி இந்த ஹாலிவுட் நடிகையா..? வெறித்தனமாக களமிறக்கும் இயக்குனர் அட்லீ..!