தமிழ் சினிமாவில், "லைஃப் டைம் செட்டில்மென்ட் ரா" என்ற வார்த்தைகளை கேட்டால் அனைவரது நினைவுக்கு வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். தனது காந்த குரலால் இன்றும் தனக்கான ரசிகர்களை உருவாக்கிய அர்ஜுன் தாஸ், ரசிகர்கள் பார்வையில் மாஸான ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட அர்ஜுன் தாஸின் திறமையை கண்டுபிடித்த இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தில் மாஸான வில்லனாக தோன்றினார் அர்ஜுன் தாஸ்.

என்ன தான் லோகேஷ் கனகராஜ் படத்தில் இவர் வில்லனாக அறிமுகமானாலும் 2012-ல் வெளியான 'பெருமான்' என்ற திரைப்படம் தான் இவரை முதலில் மக்களிடத்தில் அறிமுகம் செய்தது. இந்த படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தையும் பெற, பிரபல இதழான 'டைம்ஸ் ஆப் இந்தியா' இவரை நம்பிக்கை தரும் அறிமுக நடிகர் எனக் குறிப்பிட்டது. இதனை அடுத்து, அவர் நடித்த 'அந்தகாரம்' படத்தின் வெற்றிக்கு பின், அர்ஜுன் தாஸ் 'ரேடியோ ஒன் 94.3 எஃப்எம்' உடன் இணைந்து 'டிரைவ்' எனும் வானொலி நிகழ்ச்சியைத் தனது குரலில் தொகுத்து வழங்கினார். அதனால் இந்த நிகழ்ச்சி பயங்கர ஹிட் அடித்தது.
இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜு இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

இதனை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "கைதி" திரைப்படத்தில் குணச்சித்திர வில்லனாக தோன்றிய அர்ஜுன் தாஸின் நடிப்பை பார்த்து அவருக்கு பெண் ரசிகைகள் கூட்டம் முதல் முறையாக பெருகியது. இதற்கு பின், மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "மாஸ்டர்" திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் நம்பிக்கைக்குரிய சிறந்த வில்லனாக தோன்றி அனைவரது மனதில் இடம்பிடித்தார். அப்படத்திற்கு பிறகு விக்ரம், புட்டபொம்மா, அநீதி, போர், ரசவாதி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த சூழலில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா, பிரசன்னா, சுனில், பிரபு ஆகியோருடன் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துள்ள படம் தான் "குட் பேட் அக்லி". இந்த படத்தில் இரண்டு கதாபாத்திர வேடத்தில் நடிகர் அஜித்துடன் நடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் பிரியா வாரியருடன் இணைந்து "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாட்டுக்கு நடனம் ஆடி இருப்பார் நடிகர் அர்ஜுன் தாஸ். இந்த பாடலும் இருவரின் நடனமும் தற்பொழுது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் அர்ஜுன் தாஸ் அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்து அதிரடியான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, அர்ஜுன் தாஸ் அறிமுக இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் தமிழ் மற்றும் மலையாள படங்களில் கலக்கி வரும், பிரபல நடிகை மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க உள்ளதாக பரவலாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
இதையும் படிங்க: அஜித் ரசிகர்களை சீண்டிய விஜய் ரசிகர்கள்..! வெளுத்து வாங்கிய AK ரசிகர்கள்..! குளிர் காய்ந்த ப்ளூ சட்டை..!