இயக்குனர் சங்கருடன் பணிபுரிந்து முழுவித்தைகளையும் கற்றுக்கொண்டு மிகப்பெரிய இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் அட்லீ. இதுவரை ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஜவான் என பலப்படங்களை இயக்கி அசத்திய அட்லீ. தனது அடுத்த படத்தை எப்படி எடுப்பார், யாரை வைத்து எடுப்பார், எவ்வளவு கோடி பட்ஜெட்டில் எடுப்பார் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

இப்படி பலரும் ஆவலோடு காத்திருக்க தனது அடுத்த படத்தை சல்மான் கானை வைத்து எடுக்க இருப்பதாக முதலில் அட்லீ கூறிவந்த நிலையில், திடீரென புஷ்பா படத்தின் மாஸ் ஹீரோவான அல்லு அர்ஜுனை வைத்து படம் எடுக்க இருப்பதாக கூறினார். மேலும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை பிரியங்கா சோப்ரா என அனைவரும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி பட்ஜெட் படங்களில் நடிகை சமந்தா..! கம்பேக்கில் ஜாக்பாட் அடித்து சாதனை..!

அதன்படி, இயக்குனர் அட்லீயின் 6வது படமும் அல்லு அர்ஜுனின் 22வது படமுமான இப்படத்தை பிரபல சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்துள்ளது. இப்படத்தின் தயாரிப்புக்கு மட்டுமே சுமார் 600 கோடி ரூபாய் தேவைப்படும் என்பதால் அந்த தொகையை வாரி கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் லண்டனில் LOLA VFXல் நடைபெற்று வருகிறது. அங்குள்ள முக்கிய நபர்கள் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்துவிட்டு மிரண்டுபோயுள்ளனர் என்ற தகவலும் கிடைத்து இருந்தது.

LOLA VFX அவெஞ்சர்ஸ், டெர்மினேட்டர், அவதார் போன்ற மாபெரும் படங்களுக்கு பணிபுரிந்துள்ளனர். LOLA VFXல் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் தங்களது படத்திற்காக முன் தயாரிப்பு பணிகள் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகளையும் இந்த அறிவிப்பு வீடியோவில் காட்சிகளாக காண்பிக்க, தற்பொழுது மக்கள் இந்த படத்தை காண ஆவலுடன் காத்து கொண்டு இருகின்றனர்.

இந்தநிலையில், இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி இருக்க, இந்த படத்தில் நடிக்க இருந்த பிரியங்கா சோப்ரா திடீரென நடிக்க விருப்பமில்லை என்றதால், தற்போது இதில் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதற்கான உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் 2 நாயகிகளை படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் அட்லீ மும்பையில் உள்ள பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரம்மாண்டமாக தயாராகும் அட்லீ படம்..! லண்டன் நிறுவனத்தை வாய்பிளக்க வைத்த ஸ்கிரிப்ட்..!