சென்னை முகப்பேர் கிழக்கு பாரிசாலை பகுதியில் உள்ள லோகேஷ் என்பவரின் வீட்டில் பிக்பாஸ் நடிகர் தர்ஷன் குடியிருந்து வருகின்றார். இந்த சூழலில் இரவு நேரத்தில் நடிகர் தர்ஷன், ஜிம்முக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி இருக்கிறார். அப்பொழுது அவரது வீட்டு வாசலை மறித்து கார் ஒன்று நின்றது. அந்த கார் யாருடையது என்பது தெரியாததாலும், வீட்டிற்குள் தங்கள் காரை கொண்டு செல்ல முடியாததாலும் தர்ஷனும், அவரது தம்பி லோகேஷும், சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக வீட்டு வாசலில் டென்சனாக நின்று கொண்டு இருந்துள்ளனர்.

இதனை அடுத்து, அவரது வீட்டின் அருகே உள்ள டீக்கடைக்கு சென்று, தங்கள் வீட்டு வாசலில் நிற்கும் கார் யாருடையது என இருவரும் கேட்டுள்ளனர். அதற்கு, அங்கு குடும்பத்துடன் டீ அருந்திக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், கார் தங்களுடையது தான் என்றும் டீ குடித்து விட்டு வந்து எடுப்பதாகவும் கூறி உள்ளார். ஏற்கனவே தாங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாகவும், காரை எடுத்து வேறு இடத்தில் நிறுத்தி விட்டு செல்லுங்கள் என்றும் தர்ஷன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது.. எவ்ளோ பிரச்சனை தான் வரும்..? குமுறும் நடிகர்..!

இதனால் கடுப்பான குடும்பத்தினர், தர்ஷனுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி போக, காரை எடுக்க மறுத்த அந்த இளைஞரை தர்ஷனும், அவரது தம்பி லோகேஷும் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்ததாகவும், தடுக்க வந்த அவரது மனைவியையும், மாமியாரையும் கையை முறுக்கி தாக்கி தள்ளி விட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த செயல் அப்பகுதியில் பூதாகரமாக, குடும்பத்துடன் அடிவாங்கிய நபர் யார் என விசாரித்ததில் அவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கயல்விழியின் மகன் ஆதிச்சூடி என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து, சண்டையில் காயம் அடைந்த நீதிபதியின் மகன் ஆதிச்சூடி, அவரது கர்ப்பிணி மனைவி லாவன்யா, மாமியார் மகேஸ்வரி ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், இரு தரப்பிலும் இருந்து ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆதிசூடி, கர்ப்பிணியாக உள்ள தனது மனைவி விரும்பிக்கேட்டுக் கொண்டதன் பெயரில், வெளியில் அழைத்து வந்ததாகவும், வழியில் மனைவி ஆசைப்பட்டு கேட்டதால் டீ குடிக்க சென்றதாகவும், அதற்குள்ளாக காரை எப்படி நிறுத்தலாம்? என்று கேட்டு தர்ஷன் தாக்கியதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் காரை எடுக்கச்சொல்லிய போது, அந்த இளைஞர் தன்னை நீதிபதியின் மகன் எனக்கூறி மிரட்டியதாகவும், வாக்குவாதம் ஏற்பட்டதால் உடன் இருந்த இளைஞரின் மனைவி தங்கள் மீது டீ யை ஊற்றியதாகவும், இளைஞர் தாக்கியதில் தனது பனியன் கிழிந்தாகவும், நடிகர் தர்ஷன் தெரிவித்தார். இதையடுத்து தர்ஷன், லோகேஷ் ஆகியோர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டடு உள்ளது.
மேலும், நீதிபதியின் மகன், ஆதிச்சூடி, மருமகள் லாவண்யா, மாமியார் மகேஸ்வரி மீது கையால் தாக்கி ஆபாசமாக பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இரு தரப்பிலும் வழக்கு பதிவு செய்தாலும் போலீசார் தர்ஷன், லோகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த சூழலில், நீதிபதி மகன் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத போலீஸ் நடிகர் தர்ஷன் மற்றும் லோகேஷ் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து உள்ளனர். மேலும், தர்ஷன் கொடுத்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை என்று பலரால் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பிக்பாஸ் தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் லோகேஷ் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தற்பொழுது இவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. அதனால் தற்போது சென்னை புழல் சிறையில் இருந்து இருவரும் வெளியில் வந்துள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் அஜித் குறித்து அட்டகாசமான பதிவு.. அப்படி என்ன சொல்லியிருக்காங்க பிரியா வாரியர்..?