"சென்னை ரஜினி, கோவை ரஜினி, நேற்று சூப்பர் ஸ்டார் இன்று சூப்பர் ஸ்டார் நாளை சூப்பர் ஸ்டார் என்றும் சூப்பர் ஸ்டார்" என்ற பாடலை நாம் அனைவரும் கேட்டு இருப்போம் அந்த பாடலுக்கு ஏற்றார் போல் அவரது நடிப்பால் இன்றும் பல ரசிகர்களின் மனதில் சூப்பர் ஸ்டாராக நிலை கொண்டு இருக்கிறார். இந்த சூழலில், 1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" என்ற திரைபாத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ரஜினிகாந்த்.
பின் மூன்று முடிச்சு, காயத்திரி, 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், பில்லா, நட்சத்திரம், அன்புக்கு நான் அடிமை, காளி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி, ஜானி, பொல்லாதவன், முரட்டு காளை, நெற்றிக்கண், ராணுவ வீரன், என 1981 வரை மிகவும் கோபக்காரராகவும் ஆக்ரோஷ்க்காரராக மட்டுமே நடித்து வந்தார் ரஜினி காந்த்.

அதன் பின், 1981றிற்கு மேல் இனி தான் நகைச்சுவையாக நடிக்கப்போவதாக கூறி "தில்லு முல்லு" என்ற படத்தில் மிகவும் பிரமாதமாக யாரும் எதிர்பாராத வகையில் நகைச்சுவையாக நடித்தார். அதன் பின் வந்த படங்களான வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கோடி பறக்குது, ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, சிவா, ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், பெரிய இடத்து பிள்ளை, அதிசிய பிறவி, தளபதி, தர்மதுரை, அண்ணாமலை, மன்னன், உழைப்பாளி, எஜமான், பாட்ஷா,முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி : தி பாஸ், எந்திரன், லிங்கா, கபாலி, பேட்ட, தர்பார், அண்ணாத்த, பாபா, ஜெயிலர், வேட்டையன், லால் சலாம் என பல படங்களில் தனது நகைச்சுவை திறனை வெளிக்காட்டி மக்களை கவர்ந்தார்.
இதையும் படிங்க: ரஜினிக்கே டூப்… வீட்டிலேயே மயங்கி கிடந்த மனோஜ்... நெஞ்சைப் பிடித்து சரிந்த சோகம்..!

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்குனர் நெல்சன் இயக்கிய திரைப்படமான "ஜெயிலர்" திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. இப்படத்தில் படையாப்பா படத்தில் தனக்கு வில்லியாக இருந்த ரம்யாகிருஷ்ணனை திருமணம் செய்து அவரிடத்தில் சாதுவாக நடித்து, பின் தனது 'டைகர்' முகத்தை காண்பித்து கலக்கி இருப்பார். இப்படத்தில் அனிரூத் தனது இசையில் ரஜினியின் தீவிர ரசிகன் என்பதை காண்பித்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் வெற்றிக்கு காரணமான சூப்பர் ஸ்டார், நெல்சன் திலீப்குமார், மற்றும் அனிரூத் ஆகியோருக்கு படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறான் விலையுயர்ந்த கார்களை பரிசாக கொடுத்திருந்தார்.

இப்படியிருக்க, ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி காந்த் 'கூலி' என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தையும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும், சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் உருவாக்க புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
அதுமட்டுமல்லாமல் இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே அமேசான் பிரைம் ரூ.110 கோடி கொடுத்து தனது ஓடிடி தளத்தின் வெளியிட்டிற்காக படத்தை வாங்கி உள்ளது. இதனை தொடர்ந்து தற்பொழுது, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது வெளிநாட்டில் ஓய்வெடுத்து வரும் ரஜினிகாந்த், காலையில் அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, நடிகர் ரஜினியை கண்டு ஆச்சர்யம் அடைந்தனர். பின் அவரை நலம் விசாரித்துள்ளனர். மேலும், தன் பிள்ளைகளுக்கு ரஜினியை மிகவும் பிடிக்கும் என கூறிய அவர்கள், தன் குழந்தைகள் வீட்டில் இருப்பதாக கூறி ரஜினியை ஒரு நிமிடம் காத்திருக்குமாறு கேட்டுள்ளனர்.

இதனை கேட்ட ரஜினி, ஏன்? சிரமப்படுறீங்க நானே வரேன் என கூறி, அக்குடும்பத்தினருடன் அவர்கள் வீட்டிற்கு சென்று குழந்தைகளை சந்தித்துள்ளார். தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரஜினியின் ரசிகர்கள் எங்கு சென்றாலும் சூப்பர் ஸ்டார்.. சூப்பர் ஸ்டார் தான் என கூறி உள்ளனர்.
இதையும் படிங்க: ரஜினிக்கே அல்வா..! உங்களுக்கு பிரைம்னா.. எங்களுக்கு..? விற்பனையானது ஜனநாயகன் படம்..!