நடிகர் அஜித்தின் 63வது திரைப்படம் தான் ‛குட் பேட் அக்லி'. இந்த திரைப்டத்தை இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, பிரியா பிரகாஷ் வாரியார், ரகுராம் உள்பட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து அசத்தியுள்ளார்.

இந்த படத்தில் பழைய பாடல்களை வைத்து நடனம் ஆடுவது சண்டைபோடுவது போன்ற காட்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. முக்கியமாக "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடியிருப்பார் அர்ஜுன் தாஸ். அதுமட்டுமல்லாமல் த்ரிஷா குரலில் "உங்களுடன் நூறு வருடம் வாழனும்" என போனில் ஒருவர் பேச, அது ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் வந்த தனது மனைவியின் குரல் என்பதை உணர்ந்த அஜித், "எந்த மனைவி டா கட்டின புருஷனுடன் நூறு வருடம் வாழனும் என சொல்லுவார்" என சொல்ல, தியேட்டரில் விசில் பறந்தது. இறுதியில் படத்தில் சண்டை காட்சிகளில் "ஆளுமா டோலுமா" பாடலை வைத்து சண்டையிடுவது அமோகமாக இருந்தது.
இதையும் படிங்க: புதிய சிக்கலில் அஜித்தின் "குட் பேட் அக்லி"..! முதல் காட்சி கிடையாது.. படக்குழுவினர் அந்தர்பல்டி..!

இப்படி படத்தை குறித்தும் அதில் நடிகர் அஜித்தின் நடிப்பு குறித்தும் பலர் பெருமையாக கூறிவரும் நிலையில், அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் முதலில் "உங்களுடன் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன் என நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார்.
அவரை தொடர்ந்து, நடிகை பிரியா வாரியார் தனது இன்ஸ்ட்டா பதிவில், " இதை நீண்ட காலமாக சொல்ல காத்திருந்தேன். உங்கள் மீது எனக்கு இருக்கும் மரியாதையை எந்த அளவுக்கு வார்த்தைகளால் எழுதினாலும் போதாது.முதல் முறை பேசியது தொடங்கி கடைசி நாள் ஷூட்டிங் வரை நன்றாக உணர வைத்தீர்கள். யாரும் வேறு விதமாக உணரக்கூடாது என உறுதி செய்தீர்கள். செட்டில் நீங்கள் இருக்கும் போது அனைவரையும் பார்த்துக் கொண்டீர்கள்.

Cruise கப்பலில் பயணித்த போது நாம் ஒன்றாக சாப்பிட்ட உணவு, அடித்த ஜோக்குகள், அனைத்தும் மிக சிறப்பாக இருந்தது. உங்களை போல ஒருவரை நான் பார்த்தது இல்லை. கார், குடும்பம், பயணம் செய்வது, ரேசிங் போன்ற விஷயங்களை பற்றி பேசும்போது உங்கள் கண்கள் மாறும் விதம் அப்படி இருக்கும். உங்களை சுற்றி இருக்கும் நபர்களை பார்த்து கவனித்து அவர்களை பாராட்டுவீர்கள். உங்களது பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு தான் என்னை போன்றவர்களுக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது.

இதை இன்னும் பல ஆண்டுகளுக்கு நான் எடுத்துச் செல்வேன். எவ்வளவு உயரத்திற்கு போனாலும் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை தான் உங்களை பார்த்து கற்றுக் கொண்டேன். அஜித் சார் உங்களுடன் குட் பேட் அக்லீ படத்தில் நடித்த அனுபவத்தை நான் எப்போதும் மறக்க மாட்டேன். உங்களுடன் நடிக்க கிடைத்த வாய்ப்புக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்" என பதிவிட்டு இருக்கிறார்.

அவரை தொடர்ந்து காலத்தில் இறங்கிய நடிகர் பிரசன்னாவும் நடிகர் அஜித்துடன் நடித்ததற்கான அனுபவத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " "எனக்குப் பிடித்த நடிகருடன் சேர்ந்து நடித்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. இந்த உன்னதமான மனிதருடன் செலவிட்ட தருணங்களை எப்போதும் நினைவில் கொள்வேன், லவ் யூ அஜித் சார். ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அஜித் படமும் மாஸாக இருக்கும், அவரும் என்றும் மாஸாக தான் இருப்பார் என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்த "குட் பேட் அக்லி"...! வசூல் வேட்டையிலும் சாதனை..!