இன்று ஒரே நாளில் மூன்று ட்ரீட்க்களை கொடுத்து இருக்கிறார் நடிகர் அஜித். அந்த வகையில் "முதலாவது ட்ரிட்டாக" பார்த்தால். தனது கார் ரேஸ் வெற்றிக்கு பின் பல போட்டிகளில் கலந்து வரும் அஜித், தற்பொழுது முழு கவனத்தையும் ரேஸிங்கில் செலுத்தி வருகிறார். அவ்வப்போது துபாய்க்கு சென்று கார் ரேஸுக்காக பயிற்சி எடுத்தும் வருகிறார்.

இந்நிலையில், நடிகர் அஜித் நான் மட்டும் ஜெயித்தால் போதாது எனது மகனும் கார் ரேஸில் ஜெயிக்க வேண்டும் என நினைத்து தனது மகன் ஆத்விக்கிற்கு ரேஸ் கார் ஓட்டுவதில் பயிற்சி கொடுத்து வருகிறார். சென்னையில் "கோ கார்ட் ட்ராக்கில்" தனது மகனை ரேஸ் கார் ஓட்ட வைத்து இருக்கிறார் அஜித். சிறிது நேர பயிற்சிக்கு பின்னர் காரை எடுத்த அவரது மகன், சிறிது தொலைவில் அவரை கிராஸ் செய்து வெற்றி கண்டார். இதனை எக்ஸ் தளத்தில் பதிவு செய்து தனது ரசிகர்களுக்கு இன்று முதல் ட்ரீட் கொடுத்தார்.
இதையும் படிங்க: அஜித்தை தோற்கடித்த "குட்டி தல"...! ரேஸில் அஜித்தை திணறவிட்ட ஆத்விக்...!

அதன் பின் "இரண்டாவது ட்ரீட்டாக" பார்த்தால், ரசிகர்களின் பல வருட போராட்டங்களுக்கு பின் வெளியான திரைப்படம் தான் அஜித்தின் "விடாமுயற்சி". இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகளில் ஓடவில்லை என்றும் ஓடிடியிலும் பெரிதாக வரவேற்பு இல்லை எனவும் இப்படத்தால் தங்களுக்கு ரூபாய் 128 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் லைக்கா நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, விட்ட வசூலை மீண்டும் பிடிக்கவும் ரசிகர்களுக்கு பிடித்த படத்தை கொடுக்கவும் மீண்டும் வந்திருக்கிறது மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு முதலானோர் நடித்துள்ள படம் தான் "குட் பேட் அக்லி". விடாமுயற்சியை விட இப்படம் மிகவும் அருமையாகவும் மாசாகவும் இருக்கும் என ரசிகர்கள் இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த சூழலில் இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளநிலையில் இன்று இப்படத்தின் முன்பதிவானது இரவு "08.02" மணிக்கு தொடங்கப்படும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து "மூன்றாவது ட்ரீட்டாக" பார்த்தால், இப்படத்தின் பிரி புக்கிங்கில் வசூல் வேட்டையை கணிக்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த நடிகர் அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தின் தரமான மாஸான "ட்ரைலர்" இன்று வெளியாக உள்ளது. அதனை உறுதிசெய்துள்ள இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தின் ட்ரைலர் இன்று "இரவு 09:01"க்கு ரிலீஸ் ஆகும் என போஸ்ட் போட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த ட்ரீட்களை தாங்க முடியாத ரசிகர்கள், இன்று இரவு 8 மணிக்காகவும் 9 மணிக்காகவும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஏப்ரலில் வெளியாகும் அதிரடி திரைப்படங்கள்...! ஹிட் கொடுக்கும் படங்களால் பிசியாக தயாராகும் ரசிகர்கள்..!