நயன்தாராவின் படம் திரைக்கே வராமல் ஓடிடியில் வெளியாகிறது என கேள்வி பட்டவுடன் ரசிகர்கள் முதலில் சந்தோஷத்தால் ஆட்டம் போட்டாலும் பிறகு என்ன நயன்தாரா, நடிகர் சூர்யா நடித்து வெளியான "ஜெய் பீம்" பேட்டனை காஃபி அடிக்கிறிங்களா என ரசிகர்கள் யோசித்து தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். என்ன நடந்தாலும் சரி... திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டமே நடத்தினாலும் சரி...அதனை பற்றின கவலை எனக்கு இல்லை கண்டிப்பாக இந்த படத்தை வெளியிடுவோம் என அப்பொழுது நடிகர் சூர்யா கூறி வெளியிட்ட படம் தான் "ஜெய் பீம்".
இருளர் இன மக்களின் உண்மை வாழ்க்கையை மிகவும் தத்துரூபமாக எடுத்து ஜனாதிபதி முதல் முதலமைச்சர் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் இப்படத்தின் இயக்குனர். பின்பு இப்படத்தால் பல பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரமே மாறியுள்ளது என கூறலாம். இப்படி பட்ட படம் ஓடிடி தளமான "அமேசான் ஃபிரைமில்" வெளியானது.

நீங்கள் 'அமேசான் ஃபிரைமில்' வெளியிட்டால் நாங்கள் எங்கள் படத்தை 'நெட்பிளிக்ஸில்' வெளியிடுவோம் என YNOT studio's தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான 'சசிகாந்த்' இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் முதலானோரின் நடிப்பில் திரையரங்கிற்கே வராமல் ஓடிடியில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் டெஸ்ட்.
இதையும் படிங்க: வெளிநாடுகளிலும் ஹிட் அடித்த குட் பேட் அக்லி..! வசூலில் கோடிகளை அள்ளும் 'AK' படம்..!

இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கபட்டுள்ளது. மேலும் இப்படம் ஏப்ரல் 4-காம் தேதி, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் netflix-ல் வெளியானது. குறிப்பாக இப்படத்தில் நடிகர் சித்தார்த் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் வெளியாவதற்கு முன்பாக குறிப்பிட்ட பேட்டியில் படத்தை குறித்து பேசிய சித்தார்த்.
அதில், "நம் நாட்டில் கிரிக்கெட் என்பது பொழுது போக்காக இல்லாமல் வாழ்க்கையாக பார்க்கப்படுகிறது. அவர்கள் பெரும் வெற்றி நம் வெற்றியாக மாறியுள்ளது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் பெருகியுள்ளனர். அவர்கள் வரிசையில் நானும் அதில் ஒருவன் தான். நான் தினமும் கிரிக்கெட் பார்ப்பேன், பின்பு எனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவேன்.

ஆக, படத்தில் கிரிக்கெட் வீரராக டூப் வைத்து நடித்து ஒப்பேத்த முடியாது. அதேபோல் தான், 'டெஸ்ட்' திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகித்தான் இந்த கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதற்றம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான். கிரிக்கெட்டில் எனக்கு பிடித்தவர்கள் என்று பார்த்தால் என்றும் 'ராகுல் டிராவிட்' தான், என கூறினார்.

இதனை எல்லாம் பார்த்து கண்டிப்பாக படம் ஓடிடியில் மாஸ் ஹிட் கொடுக்கும் என நினைத்த படக்குழுவினர் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது இப்படம். நடிகர் அஜித்தின் "குட் பேட் அக்லி" படம் வந்த நேரமோ என்னவோ தெரியவில்லை நயன்தாராவின் இந்த டெஸ்ட் படத்தை காண மக்கள் அதிகமாக நாட்டம் காண்பிக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. கிட்டத்தட்ட டெஸ்ட் படத்தை ரூ.55 கோடி கொடுத்து வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு இந்த படத்தால் பார்வையாளர்களும் அதிகம் கிடைக்கவில்லையாம்.

ரூ.5 கோடிக்கு மேல் ஒரு ரூபாய் கூட வசூலும் ஆக வில்லையாம். இதனால் மிகப்பெரிய நஷ்டத்தை ஓடிடி நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது டெஸ்ட் படம். அவர்கள் படம் வாங்கிய ரூ.55 கோடியில் ரூ.5 கோடி தான் வசூல் ஆனது என்றால் அப்பொழுது படம் கிட்டத்தட்ட ரூ.50 கோடி நஷ்டத்தில் உள்ளது என பிரபல மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அஜித் என்மேல் வைத்த நம்பிக்கை..! அவரால் தான் நான் இன்று ஹீரோ.. அர்ஜுன் தாஸ் மாஸ் ஸ்பீச்..!