ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் நிகழ்ந்த கோர தீவிரவாத தாக்குதலுக்கு 26 உயிர்கள் இரையாகின. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து இன்று பிற்பகல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அவசரகதியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பெஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த அக்கூட்டத்தில் தீவிரவாதிகளின் செயலுக்கு கூட்டாக கண்டனம் தெரிவிப்பதுடன், நீதி மற்றும் அமைதியை உறுதிசெய்யும் பாதையில் பயணிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிகப் பெரிய பதிலடிக்குத் தயாராகும் இந்தியா.? இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!

இதனிடையே, மாநிலத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உமர் அப்துல்லா எழுதிய கடிதத்தில், இந்த தாக்குதல் வெறும் ஒரு பிராந்தியத்திற்கோ அல்லது ஒரு கட்சிக்கோ ஏற்பட்ட சோகம் அல்ல.,இது ஜம்மு காஷ்மீரின் ஆன்மாவில் ஏற்பட்ட காயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை கொடுத்திருக்கு... நீட் விலக்கு பெறுவோம்... மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!!