தமிழ் மட்டுமல்லாது உலகத்தின் அனைத்து மொழிகளிலும் வெளியாகி, ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு பெரிய ஹீட் கொடுத்த அனிமேஷன் திரைப்படம் என்றால் அது அவதார் திரைப்படம் தான். இதுவரை யாரும் கண்டிராத வகையில் உருவான இத்திரைபடத்தின் முதல் பாகத்தில், மனிதர்கள் அவதாரினுடைய இடங்களை அழிக்க முற்படும் பொழுது, தன் இடத்திற்காகவ போராடுபவர்களாக காணப்படுவர்.

இதனால் மனிதர்கள் அவதார் போன்ற குளோன்களை உருவாக்கி அவர்களுடன் சகஜமாக பழக வைத்து பின், அவர்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயல்வர். அதில் மனித உருவத்தில் ஊனமுற்ற கதாநாயகனாக இருக்கும் நபருக்கு கொடுக்கப்பட்ட குளோன் அவதார், மற்ற அவதார்களுடன் பழகி, அக்கூட்டத்தில் உள்ள பெண்ணை காதலிப்பதால் அவர்களுக்கு உதவி செய்ய முன் வருவார். ஆனால் இந்த சூழ்நிலையில் அவரது உண்மையான முகம் அனைவருக்கும் தெரிய வர, அவரை அக்கூட்டத்தில் இருந்து விலக்கி வைப்பர். பின் மனிதர்களால் ஏற்படும் பிரச்சனைகளில் அவர்கள் கடவுளாக பாவிக்கும் மிகப்பிரமாண்டமான மரம், வெடி மருந்துகளை வைத்து முற்றிலுமாக தகர்க்கப்படும்.
இதையும் படிங்க: ஹாரர் பாத்தாச்சு... அடுத்து திரில்லர்..! கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் செல்லும் நடிகை..!

இதனை தொடர்ந்து தன் மீது நம்பிக்கை இழந்த மக்களுக்கு உதவி செய்ய, மனிதர்களை எதிர்த்து,அவதாரத்தின் வாழ்விடத்தை அவர்களுக்கே தர முயற்சிக்கும் கதாநாயகன், யாராலும் பிடிக்க முடியாத டிராகனை பிடித்து அவர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவார்.பின் மனிதர்களுக்கும் அவதார்களுக்கும் இடையேயான போரில் மனிதர்களை வீழ்த்தி அவதாரருக்கு உண்டான இடத்தை மீண்டும் அவர்களுக்கே கொடுப்பார் கதாநாயகன்.

அதேபோல் அவதார் இரண்டாவது பாகத்தில் குடும்பம் மட்டுமே வாழ்க்கையில் முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில், தன்னை பழி வாங்க தேடி வரும் மனிதர் கூட்டங்களில் இருந்து தனது குழந்தைகளையும் மனைவியும் காப்பாற்ற போராடும் கதாநாயகனின் கதையாக இப்படம் அமைந்தது.

கிட்டத்தட்ட உலக அளவில் ரூ.2000 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருக்கும் இந்த திரைப்படத்தில்,ஜோ சல்தானா. ஸ்டீபன் லாங் உள்பட பலர் நடித்து இருந்தனர். அதுமட்டுமல்லாமல் இப்படம் இதுவரை 3 ஆஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாக நடிகர் கோவிந்தா கூறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதனை பற்றி கூறிய கோவிந்தா," ஒருநாள் அமெரிக்காவில் தொழில் ரீதியாக சர்தார்ஜி என்பவரை சந்தித்தேன். அவர் சில வருடங்களுக்குப் பிறகு,ஒரு படம் தயாரிக்க இருப்பதாகவும் ஆதலால் தன்னை ஜேம்ஸுடன் ஒரு படம் நடிக்கவும் சொன்னார். சர்தார்ஜி சொன்னதால் ஜேம்ஸை அழைத்து படம் குறித்து பேசினேன். அப்போது படத்தின் பெயர் "அவதார்" என்றும் அதில் ஹீரோ ஊனமுற்றவராக இருப்பார் என அவர் என்னிடம் கூறினார். இதற்காக அவர் எனக்கு ரூ.18 கோடி ரூபாய் தருவதாகவும், 410 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

இப்படத்தில் நான் நடித்தால், படப்பிடிப்புக்கு பிறகு ஆஸ்பத்திரியில் தான் இருப்பேன் என கூறி 'அவதார்' படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தேன். காரணம் நம்மை படத்தில் நடிக்க அழைப்பவர்கள் முக்கியமாக பார்ப்பதே நம் உடல்தான். இப்படத்தில் நடிப்பதால் உடலில் ஏற்படும் விளைவுகளையும் கருத்தில் கொண்டு நடிக்க மறுத்தேன்.

மேலும், சில சமயங்களில் தொழில் ரீதியாக சில வாய்ப்புகள் மிகவும் முக்கியமானதாக தோன்றினாலும், அதன் பின் வரும் விளைவுகள் நம்மை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என கூறினார்.
இதையும் படிங்க: தனது காதலனை வைத்து கண்ணாமூச்சி ஆடும் நடிகை அபிநயா.. 15 வருட காதல்.. கரம் சேர்ந்தது..!