நடிகர் ரவி மோகனின் சிறந்த ஜோடி என்று இன்றளவும் சினிமா வட்டாரங்களிலும் சினிமா ரசிகர்களின் உள்ளங்களிலும் இருந்து நீங்கா இடம்பிடித்திருப்பவர் நடிகை சதா. பார்க்க ஸ்லிமாகவும் இன்றைய கால நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் இவரது அழகுக்கும் நடிப்புக்கும் ஈடு இணையே கிடையாது. நடிகர் ரவிமோகனுடன் இவர் நடித்த "ஜெயம்" திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது.

அப்படத்தில் வரும் "கண்ணாமூச்சி ரே...ரே...கண்டுபிடி யாரு" என்ற பாடல் வரிகளுடன் இவர்கள் காதலிக்கவும், வில்லனிடமிருந்து தப்பிக்கவும் எடுக்கும் முயற்சி சிறப்பாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பெண்களை கவரும் வகையில் "திருவிழான்னு வந்தா இவ கோவில் வரமாட்டா" என்று பாடி சதாவை ரவி மோகன் வசியம் செய்திருப்பார்.
கடைசியில் இருவரும் காதலிக்க ஆரமித்து விடுவர். அப்படியிருக்க தனது காதலியை காண வீட்டின் ஓட்டை பிரித்து கயிற்றில் தொங்கிய படி "கவிதையே தெரியுமா என் கனவு நிதானடி" என நடு ராத்திரியில் பாடி காதலை வளர்த்து இருப்பர். எப்படியோ ஒருவழியாக வில்லனிடம் இருந்து பல பாடுகளை பட்டு கடைசியில் இருவரும் ஒன்று சேருவர். இப்படத்தில் மிகவும் அழகாக தோன்றிய சதா அன்று முதல் இன்று வரை பலரது உள்ளத்தின் நாயகியாக இருக்கிறார்.
இதையும் படிங்க: AI தோற்றத்தில் குடும்பஸ்தன் ஹீரோயின்...! ஒரே மியூசிக் வீடியோவில் ட்ரெண்டிங்...!

இப்படி சதா வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்பாக, மும்பையில் தனது தோழிகளுடன் மாடலிங் துறையில் பணியாற்றி வந்ததார். பின் சில திரை நட்சத்திரங்களின் அறிமுகத்தால் தெலுங்கில் இயக்குனர் தேஜாவின் "ஜெயம்" திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இப்படம் தெலுங்கில் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தில் நடித்தற்காக சதா "பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

இப்படி தெலுங்கில் "ஜெயம்" திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து நாக மற்றும் பிராணம் போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில், 'ஜெயம்' படத்தை பார்த்து பிடித்துப்போன தமிழ் இயக்குனர் மோகன் ராஜா, சதாவை வைத்து தனது இயக்கத்தில் அப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய நினைத்தார். ஆதலால் இப்படத்தில் ரவி மோகனுடன் சதாவை நடிக்க வைத்து தமிழிலில் அறிமுகப்படுத்தினார்.

இதனை அடுத்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதுவரை ஜெயம், வர்ணஜாலம், எதிரி, பிரியசகி, அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே, நான் அவள் அது, புலி வேஷம், எலி, டார்ச்லைட்,மத கஜ ராஜா உள்ளிட்ட படங்களில் சதா நடித்து இருக்கிறார்.

இதற்கிடையில், சில வருடங்களுக்கு முன்பு, இவர் வாடகை இருப்பிடத்தில் நடித்தி வந்த அவரது காபி ஷாப்பை அந்த இடத்தின் ஓனர் காலி செய்ய சொன்னதாக கூறி, தனது வருத்தத்தை கண்ணீர் மல்க தெரிவித்தார். பின் கண்டிப்பாக மீண்டும் எழுந்து நான் போராடுவேன் என்கிறார். அதுமட்டுமல்லாமல் தனக்கு போட்டோ கிராஃபியில் ஆர்வம் இருப்பதால் "வைல்ட் லைஃப் போட்டோகிராபர்" ஆவேன் எனவும் பதிவிட்டு இருந்தார்.
அந்த வகையில் தனது நீண்ட நாள் கனவை நினைவாக்கிய சதா, தற்பொழுது படங்களில் பெரிதும் நடிக்காமல் விலங்குகளுடன் காடுகளில் சுற்றித்திரிந்து புகைப்படங்களை எடுத்து வருகிறார். தனது புகைப்பட கலைஞர் வாழக்கையை குறித்து சதா வீடியோ வெளியிட்டு பகிர்ந்துள்ள காட்சிகளும் அதில் உள்ள அவரது எழுத்துக்கலும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் இணையும் மாஸ் நடிகர்... ! நெல்சன் ட்ரீட் என ரசிகர்கள் ஆரவாரம்...!