'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்றும் 'ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது' என பிக்பாஸ் நிகழ்ச்சியை அதிரடியாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசனை இன்றளவும் மக்கள் அனைவரும் மிஸ் பண்ணி கொண்டுதான் இருக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் படங்களில் நடித்தாலும் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டாலும் தனக்கான ரசிகர்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்.

இப்படிப்பட்ட கமல்ஹாசன் நடிகர் மட்டுமல்லாமல் கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக சினிமாவில் போற்றப்படுகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், "ராஜ்கமல் பிலிம்ஸ்" என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
இதையும் படிங்க: தக் லைஃப் குறித்த அட்டகாச அப்டேட்.. பர்ஸ்ட் சிங்கிள் எப்போது தெரியுமா..?

திரையுலகில் குழந்தையிலேயே நடிப்பில் நட்சத்திர நாயகன் பட்டத்தை வென்ற கமல், இதுவரை அபூர்வ ரகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சட்டம் என் கையில், சிகப்பு ரோஜாக்கள், நட்சத்திரம், குரு, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, தில்லு முல்லு 1981, ராஜ பார்வை, மூன்றாம் பிறை, அக்னி சாட்சி, உருவங்கள் மாறலாம், நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, பகடை பன்னிரண்டு, சிங்காரவேலன், தேவர் மகன், மகராசன், கலைஞன், மகாநதி, மகளிர் மட்டும், நம்மவர், குருதிபுனல், சதி லீலாவதி, அவ்வை சண்முகி,

இந்தியன், உல்லாசம், காதலா காதலா, தெனாலி, ஹே ராம், பார்த்தாலே பரவசம், ஆளவந்தான், பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், அன்பே சிவம், விருமாண்டி, வசூல் ராஜா எம் பி பி எஸ், மும்பை எக்ஸ்பிரஸ், நள தமயந்தி, புதுப்பேட்டை, வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், உன்னைப் போல் ஒருவன், மன்மதன் அம்பு, அன்புள்ள கமல், விஸ்வரூபம், பாபநாசம், தூங்காவனம், உத்தம வில்லன், மீன் குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2, விக்ரம், லியோ, இந்தியன் 2, தக் லைஃப், உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

இப்படி பல படங்களில் நடித்தாலும் சினிமா உலகில் பல ஏற்ற தாழ்வுளை கண்ட கமல்ஹாசன் நீண்ட நாட்களாக அமைதியாக இருந்தார். ஆனால் அவருடைய காத்திருப்புக்கு பலனாக வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவரை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி, மீண்டும் கமல்ஹாசன் என்ற பெயரை மக்கள் மனதில் ஒலிக்க செய்தார். இப்படி பட்ட கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய பொறுப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு துறையின் வியாபார அமைப்பான 'பிக்கி' அதாவது இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தெற்கு மண்டல தலைவராக கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் தலைவராக பொறுப்பேற்ற பின் பேசிய நடிகர் கமல்ஹாசன், தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளடக்கம், பார்வையாளர்கள் என்ற இருபெரும் சக்திகளே பிரதானமாக இருக்கின்றன. நாம் டிஜிட்டல் யுகத்தின் முதல் கட்டத்துக்குள் நுழையும் வேளை இது. இந்தியாவின் தொழில்நுட்ப படங்களான "அனிமேஷன் மற்றும் விஷூவல் எபெக்ட்ஸ்" போன்ற படங்களின் உருவாக்கத்தில் உலகளாவிய உற்பத்தி மையமாக நம்மை நிலைநிறுத்துகிறது.

அனைத்து பிராந்தியங்கள், மொழிகள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையில் கூட்டிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் தரும் ஒரு தொழில்துறையை உருவாக்குவதற்கு முக்கிய பங்காற்றும். இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையை 28 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்து 100 பில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்துறையாக உயர்த்துவதுடன், உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் படைப்புகளை உருவாக்க பாடுபட வேண்டும் என கமல் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த பிக்கி மாநாட்டில் கமல்தான் அடுத்த தலைவர் என்று அறிவிக்கப்பட்டாலும், இப்போதுதான் அவர் முறைப்படி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரசிகர்களே கவனமாக இருங்கள்... கமலிடம் இருந்து வெளியான எச்சரிக்கை!!