சினிமாகாரன் நிறுவன தயாரிப்பில், ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே.மணிகண்டன், சான்வே மேகானா, குரு சோமசுந்தரம், நிவேதிதா ராஜப்பன் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படமான "குடும்பஸ்தன்" திரைப்படம் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகளவில் தற்பொழுது வரை ரூ.35 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. குடும்பத்தில் நடக்கும் எதார்த்த நிகழ்வுகளை கன கச்சிதமாக எடுத்து காண்பித்து இருக்கிறார் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி.
இதையும் படிங்க: 50வது நாளை கடந்து சாதனையில் குடும்பஸ்தன்... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்..!

மணிகண்டனின் நடிப்பு இப்படத்தில் பயங்கரமாக இருந்தது .அதுமட்டுமல்லாமல் தனது அக்கா கணவரை வசைபாடுவதும், தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணை திருமணம் செய்வதால் உறவுகளும், குடும்பத்தில் இருப்பவர்களும் என்ன பேசுவார்கள் என்பதையும்,

வீட்டில் பையன் சம்பாரிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதையும் சிறப்பாக காண்பித்து இருப்பார் இயக்குநர். அதுமட்டுமல்லாமல் ஓடிடி தளமான "ஜீ 5"யில் வெளியான இப்படத்தை 50 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர் என போஸ்டர் போட்டு சமீபத்தில் மகிழ்ந்து இருக்கின்றனர் படக்குழுவினர்.

இந்த சூழலில், குடும்பஸ்தன் திரைப்படம் 50வது நாளை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது என்பதை அதிகார பூர்வமாக போஸ்ட் போட்டு அறிவித்த படக்குழுவினர் சமீபத்தில் அந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர்.

இப்படி அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கும் வேளையில் இப்படத்தில் மிகவும் அழகாக "சோறு தானே போட்டேன்" என கூறி தற்பொழுது அனைவரது மனதிலும் ட்ரெண்டிங்கில் நிற்கிறார் "குடும்பஸ்தன்" படத்தின் கதாநாயகியான சான்வி மேக்னா. இதனால் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இப்படி இருக்க, தற்பொழுது தெலுங்கில் இவர் நடிப்பில் ஏ ஐ தொழில்நுட்ப பயன்பாட்டில் உருவாகி இருக்கும் "ரு..... ரு...." என்ற பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவதுடன் பட வாய்ப்புகளும் வரிசைகட்டி நிற்கிறது.

இப்படி அடுத்தடுத்து படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் சான்வி மேக்னா தனது அழகான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

இப்படி சான்வி பதிவிட்ட புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் சிரிப்பழகி சான்வி என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'லக்கி பாஸ்கரை' ஓரங்கட்டிய 'குடும்பஸ்தன்'..! ஓடிடியில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து அபார வெற்றி..!