தமிழ் திரையுலகில் குடும்ப வாழ்க்கையை மிகவும் அழகாக சித்தரித்து மாமா, மச்சான் உறவு முதல் வீட்டில் சொந்த பந்தங்கள் தலையீடு வரை அனைத்தையும் நகைச்சுவையாகவும் அழகாகவும் காண்பித்த அருமையான படம் என்றால் அதுதான் "குடும்பஸ்தன்". தற்பொழுது எப்படி டிராகன் படம் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறதோ அதை போல இன்றும் பலரது பாராட்டை பெற்று வருகிறது இந்த திரைப்படம்.

சினிமாகாரன் நிறுவன தயாரிப்பில், ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே.மணிகண்டன், சான்வே மேகானா, குரு சோமசுந்தரம், நிவேதிதா ராஜப்பன் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படமான "குடும்பஸ்தன்" திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வந்தது. மேலும், உலகளவில் தற்பொழுது வரை பல கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: 'லக்கி பாஸ்கரை' ஓரங்கட்டிய 'குடும்பஸ்தன்'..! ஓடிடியில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து அபார வெற்றி..!

குடும்பத்தில் நடக்கும் எதார்த்த நிகழ்வுகளை கன கச்சிதமாக எடுத்து காண்பித்து இருக்கிறார் இயக்குனர். மணிகண்டனின் நடிப்பு இப்படத்தில் பயங்கரமாக இருந்தது .அதுமட்டுமல்லாமல் தனது அக்கா கணவரை வசைபாடுவதும், தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணை திருமணம் செய்வதால் உறவுகளும், குடும்பத்தில் இருப்பவர்களும் என்ன பேசுவார்கள் என்பதையும், வீட்டில் பையன் சம்பாரிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதையும் சிறப்பாக காண்பித்து இருப்பார் இயக்குநர்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் ஓடிடி தளமான "ஜீ 5"யில் வெளியானது. இதுவரை குடும்பஸ்தன் படத்தை 50 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஓடிடி நிறுவனம் சார்பில் சமூக வலைதள பக்கத்தில் போஸ்ட் போட்டு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்தநிலையில், இப்படத்தில் மிகவும் அழகாக "சோறு தானே போட்டேன்" என கூறி தற்பொழுது அனைவரது மனதிலும் ட்ரெண்டிங்கில் நிற்கிறார் "குடும்பஸ்தன்" படத்தின் கதாநாயகியான சான்வி மேக்னா. இதனால் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இப்படி இருக்க, தற்பொழுது தெலுங்கில் இவர் நடிப்பில் ஏ ஐ தொழில்நுட்ப பயன்பாட்டில் "ரு..... ரு...." என்ற பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த அளவிற்கு இந்த திரைப்படம் அனைவரது மனதிலும் குடியிருந்து வருகிறது.

இந்த சூழலில், குடும்பஸ்தன் திரைப்படம் 50வது நாளை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.. இதனை படக்குழுவினர் அதிகார பூர்வமாக போஸ்ட் போட்டு அறிவித்துள்ளனர். மேலும் உலகளவில் ரூ.35 கோடிக்கு மேல் வசூலானதாகவும் கூறப்படுகிறது. இந்த சிறப்பான நாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ரசிகர்களின் கோஷம்.. நடிகர் போட்ட வேஷம்..! அரங்கத்தையே அலற விட்ட மணிகண்டன்!!