தமிழகம் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் கொழு கொழு நடிகையாகவும் 80ஸ் மற்றும் 90ஸ்கலின் ஜெனிலியாகவும் வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பூ. தமிழ்நாட்டில் வரும் வெளிநாட்டவர்கள் கூட "குஷ்பூ இட்லியும்...கொத்தமல்லி சட்னியும் கொடுங்கள்" என்று கேட்கும் அளவிற்கு மிகவும் பிரபலமானவர்.

இப்படி அனைவரது மனதிலும் இடம்பிடித்த குஷ்பூவின் சினிமா பயணம் 1980களில் ஆரம்பித்தது. அப்பொழுதே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அவதாரம் எடுத்த குஷ்பூ, 1989ம் ஆண்டு "வருஷம் 16" என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின், தர்மத்தின் தலைவன், கிழக்கு வாசல், மைக்கேல் மதன காமராஜன், சின்ன தம்பி, பிரம்மா, நாட்டுக்கு ஒரு நல்லவன், மன்னன், பாண்டியன்,
இதையும் படிங்க: குஷ்பூ செய்த செயலால் இயக்குனரான நபர்.. ஒரே கையெழுத்தில் மாறிய தலையெழுத்து...!

சிங்காரவேலன், அண்ணாமலை, புருஷலட்சணம், கேப்டன் மகள், நாட்டாமை, முறை மாமன், முத்து குளிக்க வாரீயளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, மின்சார கண்ணா, உன்னை தேடி,சுயம்வரம், அலைபாயுதே, உன்னை கண் தேடுதே, விண்ணுக்கும் மண்ணுக்கும்,கிரி, ஜூன் ஆர், பெரியார், பழனி, ஐந்தாம் படை, வில்லு, யாவரும் நலம், போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள, கலகலப்பு 2, டிராபிக் ராமசாமி, நட்பே துணை, அரண்மனை 3, பட்டாம்பூச்சி, காப்பி வித் காதல், அரண்மனை 4, கேங்கர்ஸ் போன்ற படங்களை தயாரித்தும் இருக்கிறார். இதற்கிடையில் இயக்குனர் சுந்தர் சி-ஐ திருமணம் செய்தார் நடிகை குஷ்பூ.

நடிகை குஷ்பூவை போலவே இயக்குநர் நடிகர் என பல அவதாரம் எடுத்த சுந்தர் சியின் திரை பயணம், 1995 ஆம் ஆண்டு துவங்கியது. அந்த சமயத்தில் நடிகர் அருண் விஜயை வைத்து "முறைமாமன்" என்ற திரைப்படத்தை தயாரித்து தமிழக மக்கள் மனதில் இயக்குநராக பதிந்தார் சுந்தர் சி. அது மட்டுமல்லாமல் இதுவரை ரசிகர்கள் இணையத்தில் தேடித் தேடி பார்த்தாலும் கிடைக்காத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்" என்ற சிறப்பு வசனங்களுடைய திரைப்படமான 'அருணாச்சலம்' திரைப்படத்தையும் இயக்கியவர் இவரே.

இப்படி இருக்க, இதுவரை இயக்குனர் சுந்தர் சி, "முறைமாமன், அருணாச்சலம், தலைநகரம், வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, ஐந்தாம் படை, குரு சிஷ்யன், வாடா, நகரம் மறுபக்கம், முரட்டுக்காளை, கலகலப்பு, அரண்மனை, மத கஜ ராஜா, ரெண்டு, லண்டன் சின்னா, தக்கத்திமிதா, கிரி, வின்னர், இன்னும் நிறைய படங்களில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து உள்ளார்.

தற்பொழுது இயக்குனர் சுந்தர் சி யின் இயக்கத்தில் உருவாக இருக்கும் "மூக்குத்தி அம்மன்-2" திரைப்படத்திற்கான முக்கிய விழா சென்னையில் மார்ச் 6ம் தேதி நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் தன காதல் மனைவிக்காக மொட்டையும் அடித்து இருந்தார் இயக்குனர் சுந்தர் சி.

இப்படி கண்களில் காதல் வசனம் பேசும் சுந்தர் சி மற்றும் குஷ்பூ தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் படித்து வந்த காலத்தில் அவர்கள் தோற்றத்தை வைத்து இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்த இருவரும் தங்கள் உடல் எடையை முற்றிலும் குறைத்து ஆளே மாறிவிட்டனர்.

அதிலும் அவந்திகா இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் கிளாமர் லுக்கில் மாறி அனைவரையும் வாயடைக்க செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: குஷ்பூவுக்காக 'மொட்டை பாஸ்' ஆக மாறிய சுந்தர்.சி...! மனைவிக்காக சிறப்பு வேண்டுதல்..!