தமிழ் கதாநாயகி வரிசையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை உடையவர் நடிகை நயன்தாரா, இவர் பல விமர்சனங்களையும், வலிகளையும் கடந்து தன் உழைப்பாலும், தன் திறமையாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து, பல படங்களில் தனது நடிப்பை வெளிக்காட்டி வருகிறார்.

இதனை தொடர்ந்து, நயன்தாராவின் அறிமுகப்படமான 'ஐயா' திரைப்படம் யாராலும் மறக்க முடியாது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். தனது வெகுளித்தனமான நடிப்பில் அப்பொழுதே ரசிகர்களை உருவாக்கியவர். அதன் பின் தமிழ், தெலுங்கு மலையாளம் போன்ற படங்களில் நடித்து வந்தவர். நாளடைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி படத்தில் நடித்து, விஜயின் சிவகாசி படத்தில் "நான் சூப்பர் ஸ்டார் ஜோடி" என்ற பாட்டுக்கு நயன்தாரா நடனமாடியதாலேயே 'லேடி சூப்பர் ஸ்டார்' என்ற புனைப்பெயரைப் பெற்றார்.
இதையும் படிங்க: இனிமே அது தேவையில்ல....அஜித்தை தொடர்ந்து நயன்தாராவும் ரசிகர்களுக்கு போட்ட கண்டிஷன்!!

இப்படி சூப்பர் ஸ்டார் என பாடலின் மூலமாக தனக்கென பெயரை வைத்து கொண்ட நயன்தாரா இன்று கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலும் அடி எடுத்து வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். ஒரு காலத்தில் நயன்தாராவை விமர்சனம் செய்தவர்கள் கூட வாயடைத்துப் போகும் அளவிற்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளங்களை உருவாக்கி, விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, அழகான குழந்தைகளுக்கு தாயாக மாறி. குடும்ப வாழ்க்கையிலும், தொழிலிலும் மிகப்பெரிய இடத்தையும் பிடித்து சாதனை பெண்ணாக வலம் வருகிறார்.

இந்த நிலையில், ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு பிறகு, தற்போது கன்னடத்தில் யஷ் நடித்து வரும் 'டாக்ஸிக்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த சூழலில் நடிகர் அஜித்தை சில காலமாக "அஜித்தே கடவுளே" என ரசிகர்கள் அழைத்து வருவது தனக்கு பிடிக்க வில்லை என்று சொல்லி இனி அப்படி அழைக்க வேண்டாம் என்றார்.

அதே போல் தற்பொழுது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷிவனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இவர்கள் இருவரும் நார்மல் பீப்பள் அல்ல. என கூறியது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை கிளப்பி நயன்தாரா விக்னேஷிவனை சூப்பர்மேனாக சித்தரித்து பறக்க விட்டனர். இந்த சூழலில் தன்னை இனி யாரும் 'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்க வேண்டாம் என நயன்தாரா லெட்டர் பேட் மூலமாக தெரிவித்து இருக்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், முதலில் உங்களுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை யார் கொடுத்தார் அதனை நீங்களே வைத்து கொண்டது. யாரும் அப்படி உங்களை அழைக்கவில்லையே என கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜியை வேண்டாம் என்றாரா நயன்தாரா..? மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்திற்கு இயக்குநர் மாறியது ஏன்..?