ரஜினியின் மிக சிறந்த படம் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு மரண மாஸ் கொடுத்த படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் படைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. அதற்கு காரணம் நெல்சன் திலீப் குமாரின் படைப்புதான். இதில் அனிரூத் அவர்களின் இசை மக்களை மட்டுமல்லாது ரஜினியையே கவரும் அளவிற்கு இருந்தது. குறிப்பாக "அலப்பறை கிளப்புவோம், காவாலையா" போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது.

இப்படத்தில், தன் மகனுக்காக மீண்டும் போலீஸ் மூளையை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை வில்லனுக்கு தெளிவாக காண்பிப்பார். மேலும் வீட்டில் பொட்டி பாம்பாய் அடங்கி இருந்த ஜெயிலர் தனது மகனை கண்டுபிடிக்கும் போராட்டத்தில், தனது மனைவி கதாபாத்திரத்தில் நடித்த நீலாம்பரியையே (ரம்யாகிருஷ்ணன்) அவர் வாயால் "போதும் இதோட கொஞ்சம் நிறுத்திக்கொள்ளலாமே" என்று சொல்லும் அளவிற்கு நடிப்பில் படையப்பாவை கண்முன் கொண்டு வந்தார் ரஜினி. மேலும் இப்படத்தில் "பாரதியார் என்ன சொல்லி இருக்காரு தெரியுமா" என ஒவ்வொரு முறையும் கூறி அனைவரையும் சிரிக்க வைத்து இருப்பார் யோகி பாபு.
இதையும் படிங்க: "ஜெயிலர்" மருமகளின் ஹாட் ஸ்டில்ஸ்..! கருப்பு உடை.. கிளாமர் லுக்... ஆட்டம் கொஞ்சம் அதிகம் தான்..!

இதை தொடர்ந்து, படம் ரிலீஸ் ஆகி, ரூ600 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை தேடி தந்தது. இதனால் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கும். படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கும் "போர்ஷே கேயென்" ரக (Porsche cayenne) காரையும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களுக்கு BMW X7 காரையும் பரிசாக அளித்தார்.சன் பிச்சர்ஸ் நிறுவனர் கலாநிதிமாறன்.

இதனை அடுத்து, ஜெயிலர் திரைப்படம் பிப்ரவரி 21ம் தேதி அன்று ஜப்பானில் வெளியாகி தனது வெற்றியை அங்கும் நிலைநாட்டியது. இந்தநிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலாக இருக்கும் இந்த வேளையில் படத்திற்குண்டான அப்டேட் கிடைத்து உள்ளது. ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கான முழுக்கதையும் முடிக்கப்பட்டு, மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது.

மேலும் படத்திற்கான பூஜை வருகின்ற மார்ச் 10ம் தேதி நடைபெற்று அன்றே படப்பிடிப்புகள் தொடங்குகிறது. அதுமட்டுமல்லாது இப்படத்தின் முதல் காட்சியே சென்னையில் எடுக்கப்படுகிறது என படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

கேஜிஎப், சளார் 2, கைதி 2, விக்ரம் 2 போன்ற படங்களுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் தற்பொழுது ஜெயிலர் 2க்காகவும் காத்திருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஜெயிலர்" மருமகளின் ஹாட் ஸ்டில்ஸ்..! கருப்பு உடை.. கிளாமர் லுக்... ஆட்டம் கொஞ்சம் அதிகம் தான்..!