ரஷ்மிகா மந்தண்ணா என்று ரசிகர்களால் அன்புடன் அழகிக்கப்படும் இவர் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் கௌடவ குடும்பத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பார்க்க க்யூட்டாகவும், அழகாவும், புன்னையுடனும் ஜெனிலியாவை போன்ற வெகுளித்தனமான நடவடிக்கைகளையும் பார்த்து கவரப்பட்ட பல இயக்குநர்கள் இப்படத்திற்கு பின்பு ராஷ்மிகாவுக்கு பல படவாய்ப்புகளை கொடுத்தனர்.

இதனால் கிரிக் பார்ட்டி திரைப்படத்தை தொடர்ந்து, 2018-ம் ஆண்டு "சலோ" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர். பின்னர் அதே ஆண்டு, விஜய் தேவர்கொண்டா உடன் 'கீதா கோவிந்தம்' என்னும் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய அத்தனை மொழி திரையுலகிலும் பிரபலமானவர்.
இதையும் படிங்க: நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ஹீரோயின்கள்... சம்பளத்தை உயர்த்தியதால் வேதனையில் தயாரிப்பாளர்கள்..!

இதனை அடுத்து கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டி என்பவரை ராஷ்மிகா காதலித்தார், பின் இவர்களது நிச்சியதார்தம் 2017 ஜூலை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருமணம் நடக்க இருக்கும் வேளையில் 2018ம் ஆண்டு இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இதனால் மனவேதனையில் இருந்த ராஷ்மிகா, தனக்கு வந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றி, டியர் காம்ரேட், புஸ்பா (தி ரைஸ்),சுல்தான், சீதா ராமம், அனிமல், வாரிசு, குபேரா, புஷ்பா (தி ரூல்) போன்ற தமிழ் படங்களில் நடித்து உள்ளார். தற்பொழுது சிவகார்த்திகேயன் படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நடிகை ராஷ்மிகா கன்னட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் கன்னட மக்களையும் கன்னட ரசிகர்களையும் அவமதித்து விட்டார் என கூறி, அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பிரச்சனை செய்து வருகின்றனர். இதனால் ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு வேண்டும் என அவரின் சமூகத்தினர் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கையும் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், எந்த மொழி திரைப்படங்களிலும் இதுவரையில் இவர் நடிக்காத வேடத்தில் தற்பொழுது வர இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ராஷ்மிகா. இயக்குநர் அதித்யா சர்போத்தர் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானாவுடன் ராஷ்மிகா நாயகியாக இணைந்து உருவாகவுள்ள திரைப்படம் தான் "தாமா". மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் மே மாதம் முடிந்து, எடிட் செய்து பின் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முதன்முறையாக ராஷ்மிகா நடிக்கும் ஹாரர் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு நீடிக்கிறது.

இதனை அறிந்த ரசிகர்கள், இப்படம் கண்டிப்பாக, குழந்தை பேயாக மாறியதை போல் தான் இருக்கும். ஏனெனில் நம் ஹீரோயின் அப்படி என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வேர்களை மறந்த ராஷ்மிகா... எம்.எல்.ஏ-வின் போக்கிரித்தனம்- முட்டுக்கொடுக்கும் சாதி..!