சினிமாகாரன் நிறுவன தயாரிப்பில், ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே.மணிகண்டன், சான்வே மேகானா, குரு சோமசுந்தரம், நிவேதிதா ராஜப்பன் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படமான "குடும்பஸ்தன்" மெகா ஹிட் திரைப்படமாக மாறியுள்ளது.

இப்படத்தில், குடும்பத்தில் நடக்கும் எதார்த்த நிகழ்வுகளை கன கச்சிதமாக எடுத்து காண்பித்து இருக்கிறார் இயக்குனர். மணிகண்டனின் நடிப்பு இப்படத்தில் பயங்கரமாக இருந்தது .அதுமட்டுமல்லாமல் தனது அக்கா கணவரை வசைபாடுவதும், தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணை திருமணம் செய்வதால் உறவுகளும், குடும்பத்தில் இருப்பவர்களும் என்ன பேசுவார்கள் என்பதையும், வீட்டில் பையன் சம்பாரிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதையும் சிறப்பாக காண்பித்து இருப்பார் இயக்குநர்.
இதையும் படிங்க: தங்கையின் புகைப்படத்தை பகிர்ந்த சான்வி மேக்னா..! குழப்பத்தில் ரசிகர்கள்...!

மேலும், இப்படம் ஓடிடி தளமான "ஜீ 5"யில் வெளியாகி, 50 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களால் போற்றப்பட்ட படம் என்ற பெயரை வாங்கியது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் அதனை கேக் வெட்டி கொண்டாடினர். அப்பொழுது நிகழ்ச்சியில் பேசிய படத்தின் கதாநாயகன் மணிகண்டன், 'குடும்பஸ்தன்' கதை தான் என் வாழ்க்கை என ஆரம்பித்தார்.

அதில், சில நாட்களுக்கு முன்பு புதிய வீடு வாங்கி, அதற்கு உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து வெகுவிமர்சையாக கிரகப்பிரவேசம் செய்து இருந்தோம். அப்போது என் பிரண்ட்ஸிடம் சென்ற என் அப்பா, "அவனை நான் பெத்தேன், படிக்க வைத்தேன் அவ்வளவுதான், மத்தபடி மீதி எல்லாவற்றையும் நீங்க தான் பாத்துக்கிறீங்க, இனியும் அவன பத்திரமா பாத்துக்கோங்க" என்று சொன்னார். அவர் கூறியது உண்மை தான்.

ஏனெனில் என்னுடைய கேரியர்ல நான் எடுத்த செலக்சன்ல இருந்து, சினிமாவிற்கு நான் தகுதியானவனா என்று நான் நினைக்கும் போதெல்லாம், சினிமாவுக்கு நீ தகுதியானவன் தான் என்று மற்றவர்களை போல போலியாக சொல்லாமல், இல்ல இப்போதைக்கு உனக்கு தகுதி இல்லை, இன்னும் நீ நிறைய கத்துக்கணும் என்று சொல்லி என் பிரண்ட்ஸ் தான் மோட்டிவேட் பண்ணுவாங்க. அதுமட்டுமல்லாமல் கிட்ட தட்ட நாலு வருஷம் எனக்கு வேலையும் இல்ல, எங்க வீட்ல சுத்தமா காசும் வாங்கவே இல்ல, அந்த நாலு வருஷமும் என்னுடைய பிரண்ட்ஸ் பிரவீன் மற்றும் ராகேந்து தான் தினமும் காசு கொடுப்பாங்க" என அவர் கண்ணீர் மல்க கூறி இருந்தார்.

அவரை போலவே, இப்படத்தில் மிகவும் அழகாக "சோறு தானே போட்டேன்" என கூறி தற்பொழுது அனைவரது மனதிலும் ட்ரெண்டிங்கில் நிற்கிறார் "குடும்பஸ்தன்" படத்தின் கதாநாயகியான சான்வி மேக்னா. இந்த படத்தினால் தற்பொழுது இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இப்படி இருக்க, சமீபத்தில் தெலுங்கில் இவர் நடிப்பில் ஏ ஐ தொழில்நுட்ப பயன்பாட்டில் உருவாகி இருக்கும் "ரு..... ரு...." என்ற பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தது.

இந்த சூழலில், எப்பொழுதும் தனது இன்ஸ்ட்டா பதிவில் தனது அழகை வெளிப்படுத்தும் புகைப்படங்களை மட்டும் பதிவிடும் சான்வி, கொஞ்சம் வித்தியாசமாக மணிகண்டனை குறித்து பதிவிட்டுள்ளார். அதில், "உங்களைப்போல திறமை வாய்ந்த நடிகரோடு பணிபுரிந்தது ஓர் அழகான அனுபவம். 'குடும்பஸ்தன்' படம் மூலம் அருமையான இணை நடிகர் மட்டுமன்றி சிறந்த நண்பரும் கிடைத்திருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: AI தோற்றத்தில் குடும்பஸ்தன் ஹீரோயின்...! ஒரே மியூசிக் வீடியோவில் ட்ரெண்டிங்...!