தமிழ் திரையுலகில் தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை துஷாரா விஜயன். பார்க்க மாநிறத்தில் இருந்தாலும் தனது அழகு பார்வையால் தனக்கென ரசிகர்களை உருவாக்கி வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு பல படங்களில் நடித்தாலும், இவரை முதலில் நம்பி தேர்ந்தெடுத்தது இயக்குனர் பா.ரஞ்சித் தான்.

துஷாராவின் புகைப்படத்தை பார்த்து தேர்ந்தெடுத்த பா.ரஞ்சித், அவரது நடிப்பை பார்த்து முதலில் நம்பிக்கை வரவில்லை என்றும் பின்பு படத்திற்காக அவர் வடசென்னை மக்களிடம் பழகிய விதங்கள், படத்திற்காக போட்ட உழைப்புகள் அனைத்தும் பிடித்து போக பின்பு "சார்பட்டா பரம்பரை" திரைப்படத்தில் அவரை நாயகியாக நடிக்க வைத்தார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சமந்தா எக்ஸ் புருஷனை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..! சாம்க்காக போர் கொடி தூக்கி அசத்தல்..!

இப்படி தனது உழைப்பால் முன்னுக்கு வந்த துஷரா தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு "பேஷன்" படிப்பை முடித்த பின்பு, படிப்படியாக திரையுலகில் நுழைந்து தனது திறமையை வெளிக்காட்டி, 2019ம் ஆண்டு "போதை ஏறி புத்தி மாறி", என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர்.

இதில் இவரது நடிப்பின் திறமையை பார்த்த இயக்குநர்கள் அடுத்தடுத்து அவருக்கு பல பட வாய்ப்புகளை கொடுத்து வந்தனர். அதில் 2021ம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான "சார்பட்டா பரம்பரை" திரைப்படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து, 2022-ல் "நட்சத்திரம் நகர்கிறது"என்ற திரைப்படத்திலும், பின் 2024-ல் தனுஷுக்கு தங்கையாக "ராயன்" திரைப்படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மீண்டும் அதே 2024-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் "வேட்டையன்" திரைப்படத்தில் நடித்து ஸ்டார் நடிகைகளின் வரிசையில் ஒருவரானார்.

இப்படி தனது உழைப்பால் உயர்ந்து உள்ள துஷாரா விஜயனுக்கு, 2023 ஆம் ஆண்டு 'தமிழ் நட்சத்திர விருதுகளில் சிறந்த நடிகைக்கான நட்சத்திர விருது' கிடைத்தது. மேலும் ஓடிடி பிளே விருதுகள் 2022ல் 'வளர்ந்து வரும் ஓடிடி நட்சத்திர பெண்' என்ற சிறந்த விருதும் கிடைத்தது. அடுத்ததாக JFW சிறந்த அறிமுகவிமர்சகர் என்ற விருதுகளும், பின் 'கலாட்டா கிரவுண்ட் விருது' என பல விருதுகளை சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்ததற்காக வாங்கினார்..

இப்படி இருக்க, தற்பொழுது பல பிரச்சனைகளின் மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் நடிகர் விக்ரமின் "வீர தீர சூரன்" திரைப்படம். இப்படம் வெளியாக இருந்த வேளையில் ஐகோர்ட் இப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதித்தது.

அதனை தொடர்ந்து மீண்டும் பிரச்சனைகள் அனைத்திற்கும் சுமுக தீர்வு கண்ட இயக்குனர் அருண்குமார் படத்தின் சிரமத்திற்கு மன்னிக்கவும் என கூறி படத்தை வெளியிட்டார். இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தில் விக்ரமுக்கு துணையாக நடித்து அசத்தி இருக்கிறார் நடிகை துஷாரா விஜயன்.

இந்த நிலையில், "வீர தீர சூரன்" திரைப்படத்தில் நடித்த துஷாரா விஜயனுக்கு ரசிகர்கள் பட்டாளம் தற்பொழுது பெருகியுள்ளது. அதற்கு நன்றி சொல்லும் விதமாக இன்ஸ்டாவில் தற்பொழுது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் "வீர தீர சூரன் படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் அளவற்ற அன்பிற்கு நன்றி. கலைவாணியின் பயணம் மிக ஸ்பெஷலானது.
இந்த கதாபாத்திரம் என்றும் என் மனதில் நிலைத்து இருக்கும். இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் அருண்குமாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். விக்ரமுடன் திரையை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த சந்தோஷம். ஜி.வி.பிரகாஷின் இசை கலைவாணிக்கு மேஜிக்கலாக உயிர்கொடுத்துள்ளது. எஸ்.ஜே . சூர்யா மற்றும் சுராஜ் உடன் நடித்தது மிகவும் பெருமை" என நன்றி தெரிந்துள்ளார்.
இதையும் படிங்க: மாலை பொழுதின் மயக்கத்தில் அதுல்யா ரவி.. இளசுகளை இழுக்கும் அழகிய புகைப்படம்..!