தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகத்தில், கூலியாக இருக்கும் புஷ்பா, தன் தாயை அனைவரும் மதிக்க வைக்கவும், தன்னுடைய பிறப்பை நிலைநாட்டவும் பணக்காரனாக செம்மர கடத்தலில் ஈடுபட நினைத்து, போலீசிடம் இருந்து மரத்தை பாதுகாத்து சென்னைக்கு கடத்த கொண்டாரெட்டியுடன் இருந்து உதவி செய்து.பின் சென்னை முருகனை சந்தித்து பெரிய ஆர்ட்டர்களை எடுத்து சின்டிகேட்டுக்கே தலைவராக மாறுவார். இதில் இவருக்கு வில்லன் என்றால் சகாவத், போலீஸான சகாவத்தை புஷ்பா அவமானப்படுத்துவதால் பழிவாங்க துடித்து காத்திருப்பது போல் படம் முடிந்து இருக்கும்.

பின் நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா 2 அனைவரது கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் கடத்தலுக்கு தடைகளை கொண்டு வரும் சகாவத்தை மீறி வெளிநாடுகளுக்கு செம்மரத்தை கடத்துவது. தனது மனைவி கேட்டதற்காக முதலமைச்சருடன் ஒரு போட்டோ எடுக்க புதிய முதலமைச்சரை கொண்டு வருவது. கடைசியில் தனது தங்கையை காப்பாற்ற அடிவாங்கி, தனது குடும்பத்துடன் இணைவது போன்று காண்பிக்கப்பட்டு இப்படம் முடிவடைந்திருக்கும். இப்படத்தில் இன்னும் ஜாலி ரெட்டி பழிவாங்க இருப்பதால் புஷ்பா பாகம் மூன்று வர உள்ளது.
இதையும் படிங்க: ராஜமௌலியை கடுப்பாக்கிய வீடியோ.. கொதித்துப்போன மகேஷ் பாபு.. யார் பார்த்த வேலை என விசாரணை...!

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஓடிடி நிறுவனத்தினர் போர்ச்சுகீஸ், இந்தோனேசியா, போலிஷ் (போலந்து), ஸ்பானிஷ் மற்றும் தாய்லாந்து என ஐந்து மொழிகளில் ஆங் சப் என்ற டைட்டில்களுடன் ஓடிடியில் புஷ்பா 2-வை வெளியிட்டனர். அங்கும் இந்த படம் வெற்றியடைந்து இருக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ.1871 ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது புஷ்பா2.

இப்படி இருக்க, இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் ஹீரோ ஹீரோயினாக நடித்து இருப்பர். ஆனால் உண்மையில் இவர்கள் இருவரையும் இப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற துளி எண்ணம் கூட இயக்குனருக்கு இல்லையாம். இப்படத்தில் முதலில் நடிக்க இயக்குனர் மூன்று பேரை சந்தித்துள்ளார். அவர்கள் முவரும் மறுக்கவே பின் அல்லு அர்ஜுனும் ராஷ்மிகா மந்தனாவும் நடித்து உள்ளனர்.

அந்த வரிசையில் முதலில் இருப்பவர் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தான். இவர் இப்படத்தில் அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் கேட்டுள்ளார் ஆனால் அவர் மறுத்திருக்கிறார்.

அடுத்த வரிசையில், ராஷ்மிகா நடித்த 'ஸ்ரீ வள்ளி' கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவை கேட்டுள்ளார் அவரும் மறுத்துள்ளார்.

பின் வில்லனாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை கேட்டுள்ளார் இயக்குநர். அவரும் நான் இப்படத்தில் நடித்தால் சரிவராது, மேலும் நடித்தால் படம் ஓடாது, இது எனக்கான கதை இல்லை என கூறி அனுப்பி வைத்து விட்டாராம்.

இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள், ஒருவேளை புஷ்பாவில் மகேஷ் பாபு, சமந்தா, விஜய்சேதுபதி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்து பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் மகேஷ் பாபுவுக்கு கோரிக்கை வைத்த அஷ்வின் மாரிமுத்து... அடுத்து அவருடன் படமா.. குழப்பத்தில் ரசிகர்கள்..!