சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இருந்து முன்னேற்றம் அடைந்து தற்பொழுது இந்தியாவின் ஸ்டார் நடிகராக களமிறங்கி இருக்கிறார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் மக்களை சிரிக்க வைக்கும் கலக்க போவது யார் என்ற நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அதில் ஸ்டேண்டப் காமெடியனாக வென்று சிலரது அன்பை பெற்றார்.
பின்பு அதே தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகத்திற்கு தன்னை அடையாளப்படுத்தினார். பின்பு தொகுப்பாளராக களமிறங்க, இவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பை பயத்தால் தவற விட்ட சிவகார்த்திகேயன். நீண்ட நாட்களாக இதற்காகவே தன்னை முழூமையாக தயார் செய்து இழந்த தொகுப்பாளர் பணியை தன் கையில் வெற்றிகரமாக எடுத்தார்.

இதனை அடுத்து ஜோடி நம்பர் ஒன், அது இது எது, விருது வழங்கும் விழா என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனது நகைச்சுவை திறமையால் பலரது மனதை கொள்ளை கொண்டார். இதனை அடுத்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாற அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க அதனை சரியாக பயன்படுத்தி கொண்ட சிவா, மெரினா, 3, எதிர்நிச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, காக்கி சட்டை, சிமராஜா, வேலைக்காரன், அமரன் என பல படங்களில் நடித்து தற்பொழுது மக்கள் மனதில் ஸ்டார் நட்சத்திரமாக நீங்கா இடம் பிடித்தார்.
இதையும் படிங்க: கிரிக்கெட் வீரருக்கு பாராட்டு..! சிவகார்த்திகேயன் பதிவால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

இப்படி இருக்க, தற்பொழுது ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் "மதராஸி". இந்த படம் வட இந்தியர்கள் தமிழர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை உணர்த்தும் படமாக இருக்கும் என ஏற்கனவே கூறியிருந்தார் முருகதாஸ். மேலும் இப்படம் ஆசிரியர்கள் தினமான செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.

அதே போல், இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' என மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா முதலானோர் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் படம் தான் பராசக்தி. இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் நேரடியாக விஜயின் ஜனநாயகன் படத்துடன் மோத உள்ளது.

இப்படி இருக்க, நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை மிகவும் பிரபலமான இயக்குனர் இயக்க உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் . அதன்படி மாநகரம், மாஸ்டர், விக்ரம், கைதி, லியோ போன்ற படங்களை முன்னணி கதாநாயகர்களை வைத்து இயக்கி ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவரது நீண்ட நாள் கனவு என்றால் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பதே.

அதன்படி, ஏற்கனவே நடிகர் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த லோகேஷ், தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து "கூலி" என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், அதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கதை பிரமாண்டமாக இருப்பதால் சிவா நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: கேரள முதல்வரை சந்தித்த சிவகாரத்திகேயன்.. இதுதான் காரணமாம்!!