இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக அம்மனை வித்தியாசமான முறையில் காண்பித்த படம் என்றால் அதுதான் "மூக்குத்தி அம்மன்". இதுவரை ரம்யாகிருஷணனை அம்மனாக பார்த்தவர்களுக்கு சற்று மாடன் அம்மனாக வந்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்டு சென்றார் நடிகை நயன்தாரா. குறிப்பாக கடவுளை பயபக்தியுடன் 'அம்மா...தாயே....எனக்கு உதவி செய்மா' என மக்கள் அழைக்கும் காலம் போய் இப்படத்தில் அம்மனை "உனக்கும் எனக்கும் உள்ள பொருத்தம்" என பாட்டு பாடி ஆர்.ஜே.பாலாஜி அழைக்க, உடனே அம்மன் வந்து பதில் கொடுப்பார்.

இப்படம் திரைக்கு வருவதற்கு முன் பல எதிர்ப்புகள் வந்தாலும் படம் வெளியான பிறகு பலரது பாராட்டை பெற்றது. இப்படத்தில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கும். குறிப்பாக ஆர்.ஜே. பாலாஜி தனது தங்கையிடம் என்ன வேண்டும் என கேட்க, அவர் எனக்கு ஒருநாள் வீட்டு வேலையில் இருந்து லீவ் வேண்டும் என்பதும், இந்த வீட்டில் இருந்து வெளியே செல்ல நினைக்கும் பெண்ணிடம், ஓடி போன உன் அப்பாவுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் இருக்கு என அம்மன் கேட்பதும்,

அம்மன் அழகாக இருப்பார்கள் என கதாநாயகன் கூறுவதும் , கடைசியில் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கடவுளிடம் நேரடியாக கேளுங்கள் கண்டிப்பாக கடவுள் அதை செய்வார், ஏமாற்றுபவர்கள் கூறுவதையே கடவுள் கேட்கும் பொழுது நீங்கள் கூறுவதை கேட்க மாட்டார்களா என்ன, என கூறி "உங்களுக்குள் இருக்கும் கடவுளை வெளியே தேடாதிங்க உங்ககளுக்குள் தேடுங்க ஏனென்றால் அதுதான் உங்கள் பெஸ்ட் வர்ஷன்" என அம்மன் மறைந்து போவார். இந்த காட்சிகள் இப்படத்தில் மிரளவைத்தது.

இதனை தொடர்ந்து இப்படம் எப்பொழுது மீண்டும் வரும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி மூக்குத்தி அம்மன் 2 மீண்டும் வருவதாகவும், அதில் நான் இருக்க மாட்டேன் எனவும் கூறினார். எனக்கு பதிலாக என்னை சினிமாவில் அறிமுகம் செய்த எனது குரு சுந்தர் சி இருப்பார். அவர்தான் இரண்டாம் பாகத்திற்கு சரியான ஆள் என்று கூறியிருந்தார்.

இதனை அடுத்து மூக்குத்தி அம்மன் 2, நயன்தாராவின் ஃப்ரொடக்ஷனான, ரவுடி பிக்சர்ஸ், மற்றும் சுந்தர்.சி.யின் அவ்னி சினி மேக்ஸ் மற்றும் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். இதனை உறுதி படுத்தும் வகையில், சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக இப்படத்தின் பூஜைகள் நடைபெற்றது. இந்த படத்திற்காக, காண்பவர்களை பிரமிக்க வைக்கும் அளவிற்கு உண்மையான கோயில் போன்ற பெரிய கோயில் செட் அமைக்கப்பட்டு இருந்தது.

இப்படி இருக்க, சமீபத்தில் இப்படத்தின் பட்ஜெட் தொடங்கும் பொழுது ரூ.55 கோடி மேட்டுமே என முடிவு செய்யப்பட்டு இருந்ததாகவும், ஆனால் கூட்டி கழித்து பார்த்தால் இப்படத்தின் பட்ஜெட் தற்பொழுது ரூ.112 கோடியாக மாறியுள்ளது எனவும் அந்த அளவிற்கு காட்சிகள் படமாக்கப்படுகிறது எனவும் மூத்த பத்திரிகையாளர் கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல் தற்பொழுது வரை நடிகை நயன்தாரா தனது சம்பளத்தில் பாதி மட்டுமே வாங்கியுள்ளதாகவும் மீதி சம்பளமாக படத்தின் லாபத்தில் இருந்து பங்கு கொடுங்கள் என கேட்டுள்ளார் என்றும் அவர் கூறி இருந்தார்.

இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், இயக்குநர் சுந்தர்.சிக்கும், நயன்தாராவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் நயன்தாரா படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேறி விட்டதாகவும் செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வந்தன. இதனை அறிந்த, மூக்குத்தி அம்மன் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான 'நடிகை குஷ்பு' இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து சில வதந்திகள் பரவி வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல், இயக்குனர் சுந்தர்.சி மிகவும் அனுபவமிக்க, புத்திசாலியான இயக்குனர். அவரைப்போல், நயன்தாராவும் திறமையான தொழில் முறை சார்ந்த நடிகை என்பதால் இருவருக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை. எனவே, மூக்குத்தி அம்மன்-2 படப்பிடிப்பு எந்தவித சலசலப்பும் இன்றி அமைதியான முறையில் நடந்து வருகிறது. அதனால் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். நாங்களும் இந்த வதந்திகளை எங்கள் படத்திற்கு வந்த திருஷ்டியாக எடுத்துக் கொள்கிறோம். பொழுதுபோக்கான ஒரு மிகச் சிறந்த மெகா ஹிட் படத்திற்காக அனைவரும் காத்திருங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார் நடிகை குஷ்பு.

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க சொன்னா சரியாக தான் இருக்கும் குஷ்பூ, நீங்க படத்தை கவனமாக எடுங்க, படத்தின் மீது விழுந்த திருஷ்டியை நாங்கள் எடுக்கிறோம் என பதிவிட்டு வருகின்றனர்.