"நான் மூன்று கேள்வி கேட்கவா" என ராட்சசி படத்தில் கேட்கும் ஜோதிகா தற்பொழுது நிஜ வாழ்விலும் அப்படித்தான் கேட்டு வருகிறார். தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா நிறைய போட்டோ ஷூட்களையும், ஜிம் புகைப்படங்களையும் வெளியிடுவார். அதே போல் சில நாட்களாக ஹீரோக்கள் இல்லாமல் தனியாளாக பெண்களை கவரும் வகையிலான படங்களை நடித்து வருகிறார். மேலும், மக்கள் அனைவருக்கும் உதாரணமாக மாறி, தனது கணவரை சொந்த இருப்பிடமான மும்பைக்கு அழைத்து சென்றார். பின் பிள்ளைகளும் சென்றனர். இப்பொழுது குடும்பமாக மும்பையில் குடிபெயர்ந்து உள்ளனர். இது ஒருபுறம் இருக்க ஹீரோக்களையும் தற்பொழுதுபேசி வருகிறார்.

சமீபத்தில், மகளிர் தினத்தன்று ஜோதிகா தென்னிந்தியா சினிமாவை குறித்து பேசினார் அதில்,"மற்ற சினிமாவை போல் தென்னிந்திய சினிமா இல்லை. இங்கு ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் மட்டும் தான் அதிகமாக உள்ளது. பெண்களை சிறப்பு பாடல்களுக்கு கவர்ச்சி நடனமாட வைப்பதற்கும், ஆண் நடிகர்களை புகழ்ந்து பேசுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அந்த பழக்கம் இன்றும் இங்கு மாறவில்லை. அதனால் தான், நான் வேறு பாதையை தேடி, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்தேன். பெரும் பாலும் ஹீரோக்கள் உள்ள படங்களுக்கு நோ கூறியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்து பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் அந்த சுவடு மறைவதற்குள் இவரது கணவரான சூர்யாவின் படத்தை குறித்து பேசியவர்களையும் கேள்வி கேட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: ஓ இது தான் விஷயமா...வெளியானது சூர்யாவின் அடுத்த படத்திற்கான சீக்ரட்..!

சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'கங்குவா' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகுந்த தோல்வியில் முடிந்தது, படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலாகும் என கூறிய நிலையில், ஒரு கோடி கூட தாண்டவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை ஜோதி கங்குவா படம் குறித்தும் சூர்யாவின் நடிப்பு குறித்தும் அதன் விமர்சனம் குறித்தும் பேசி அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

ஜோதிகா கூறுகையில், "பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வெற்றியடைந்த பல திரைப்படங்கள் தரம் குறைந்த திரைப்படங்கள் தான், அவைகளை நான் பார்த்திருக்கிறேன். அந்த படங்களே மிகவும் கரிசனத்துடன் விமர்சனம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவைகளை விட என் கணவர் சூர்யாவின் படம் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதை பார்த்தேன். இது எனக்கு அநீதியாக தெரிகிறது. ஏனெனில் இத்திரைப்படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமலேயே இருக்கலாம். ஆனால், படத்திற்காக மிக கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்திருக்கிறார்கள். எனினும், சில மோசமான படங்களை விமர்சனம் செய்யாதவர்கள் இந்த படத்திற்கு கடுமையாக விமர்சனங்களை முன்வைத்த போது அது என்னை பாதித்தது. அதுமட்டுமல்லாமல், ஊடகங்கள் பாரபட்சமாக நடந்துகொள்வது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என கூறினார்.
இதையும் படிங்க: மீண்டும் வருகிறது ஜெய் பீம் 2..! மிரட்டும் தோணியில்.. அலற விடும் தோற்றத்தில் சூர்யா...!