ராசாவின் மனசுல என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் தான் வைகைப்புயல் வடிவேலு, இன்று சந்தானம், கிங்ஸ்லி, யோகிபாபு, சூரி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், சதிஷ் என பலர் வந்தாலும் என்றும் மக்கள் மனதில் இருந்து நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் வடிவேலு. இப்படி இருக்க, இன்று எந்த மீம்ஸ் என்றாலும் அவரது டயலாக் இல்லாத மீம்ஸ்களையும் பார்க்கவும் முடியாது உருவாக்கவும் முடியாது. அந்த அளவிற்கு இவரது காமெடி டயலாக்குகள் விவேக்கை போல சிரிக்கவும் வைக்கும் சிந்திக்கவும் வைக்கும்.

வடிவேலுவின் சிறந்த டயலாக்குகளாக இன்றுவரை பார்க்கப்படுவது என்றால் "ஏய்"திரைப்படத்தில் ‘இப்பவே கண்ண கட்டுதே’ மற்றும் ‘கொஞ்சம் ஓவராதான் போறோமோ..போவோம்..! என்ன பண்ணிடுவாங்க', வின்னர் திரைப்படத்தில் ‘ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’மற்றும் ‘என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு’ அதே படத்தில் ‘வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்’ மற்றும் 'போங்க தம்பி நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது', ‘ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையப்பா’ அடுத்தாக சந்திரமுகியில் ‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு', சீனாதானா 001ல் ‘ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு’கிரி திரைப்படத்தில் ‘நான் அப்படியே சாக் ஆயிட்டேன்' மற்றும் 'பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’, தலைநகரம் படத்தில் ‘பில்டிங் ஸ்ட்ராங்கு பேஷ்மென்டு வீக்கு’, மருதமலை திரைப்படத்தில் ‘ரிஸ்க் எடுக்குறதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி' என பலகோடி டையலாக்குகளுக்கு சொந்தக்காரர்.
இதையும் படிங்க: சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கேட்ட வழக்கு... நீதிமன்றத்தில் ஆஜரான வடிவேலு...!

இப்படிப்பட்ட நடிகர் வடிவேலு தன் திரையுலக பயணத்தில் நகைச்சுவை நடிகராக 1988 ஆம் ஆண்டு தொடங்கி 2005ம் ஆண்டு வரை பல படங்களில் நடித்து வந்தவர், கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதனை தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு தம்பிராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நான் அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதேபோல் தெனாலிராமன், எலி, நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.

இப்படி பட்டவரின் வாழ்க்கை ஒரே ஒரு பிரச்சாரத்தில் முடிந்து போனது. குறிப்பாக 2011ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த பிரச்சாரத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இவரது நேரமோ என்னமோ தெரியவில்லை அந்த தேர்தலில் தி.மு.க கட்சி படு தோல்வி அடைந்தது. இதனால் வடிவேலுவை புரட்டி எடுத்தனர். சிக்கலுக்குள்ளான வடிவேலு பல மாதங்களாக சினிமாவில் நடிக்க விடாமல் தடை செய்தனர். இதனால் மனவேதனையில் இருந்த வடிவேலு நீண்ட நாட்களுக்கு பிறகு 2021ம் ஆண்டுக்கும் மேல் திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

இப்படி இருக்க, மாமன்னன் படத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக நடித்து கலக்கிய நடிகர் வடிவேலு, தற்பொழுது சுந்தர் சி மற்றும் வடிவேலும் இணைந்து பல படங்களில் நடித்து உள்ளனர். இவர்கள் இருவரின் காம்போவில் உருவாகியுள்ள திரைப்படமான 'கேங்கர்ஸ்' படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஸ்காந்த் ஆகியோருடன் நடிகர் வடிவேலும் நடித்துள்ளனர்.

இப்படம் ஏப்ரல் மாதம் 24ம் தேதி வெளியாக உள்ள நிலையில், கேங்கர்ஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை இன்று முக்கிய நபர்கள் சிலர் பார்த்துள்ளனர். படத்தை பார்த்த அவர்கள், படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றும், வடிவேலு பல கெட்டப்களில் மிரட்டியிருக்கிறார் என்றும் இப்படத்தின் மூலம் நகைச்சுவையில் வடிவேலு கம்பேக் கொடுக்கப்போகிறார் என்றும் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் வடிவேலுக்கு சிங்கமுத்து வச்ச செக்... ஓ.கே. சொன்ன உயர்நீதிமன்றம்...!