தமிழ் திரையுலகில் தனக்கென ரசிகர் படையை வைத்திருக்கும் இயக்குனர் என்றால் அது வெங்கட்பிரபு தான். இவர் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். பெரும்பாலும் நண்பர்களின் செயல்பாடுகளையும் அவர்களின் புரிந்து கொள்ளும் தன்மையை சுட்டிக்காட்டும் விதமாகவும் படங்கள் இருக்கும்.

இவருடைய படங்கள் அனைத்தும் குடும்பமாகவும் நண்பர்களுடனும் சேர்ந்து பார்க்கும் படமாக அமையும். அப்படித்தான் இவருடைய கதை அம்சங்கள் அனைத்தையும் உருவாக்குவார். தற்பொழுது இவர் இயக்கிய, "தி கிரேட் டெஸ்ட் ஆப் ஆல் டைம்" என்கின்ற "கோட்" திரைப்படத்தில் "ஏ ஐ" தொழில்நுட்பத்தின் மூலமாக நடிகர் விஜயகாந்தை கண்களுக்கு முன் கொண்டு வந்து பலரது பாராட்டுகளை பெற்றார். அதுமட்டுமல்லாமல் பிரபல கிரிக்கெட் வீரரான தோனி கலத்தில் நடந்து வரும் பொழுது நடிகர் விஜய் ஸ்டேடியத்திலிருந்து தாவி குதிப்பதைப் போன்ற காட்சிகளை வைத்து தியேட்டரையே அலற வைத்தார். அதனை விட உருப்படியாக விஜய்க்கு வில்லனாக மோகனை வைத்தாலும், உண்மையான வில்லனாக விஜய்க்கு விஜயையே வைத்து டிவிஸ்ட் கொடுத்து இருப்பார். இப்படி தன் வாழ்நாள் கனவாக விஜய்யை வைத்து ஒரு படத்தை முடித்து இருக்கிறார் வெங்கட் பிரபு.
இதையும் படிங்க: தனுஷ் இல்ல விஜய் தான் பிடிக்கும்.. சர்ச்சையில் சிக்கிய புது நடிகை... ஆத்திரத்தில் ரசிகர்கள்..!

ஆனால் விஜய்க்கு முன்பாகவே நடிகர் அஜித்தை வைத்து "மங்காத்தா" என்ற பிரம்மாண்டமான படத்தை எடுத்து உள்ளார். இப்படத்தை இன்று பார்த்தாலும் மெய் சிலிர்க்கும் வகையில் இசைகளை வைத்து, மவுஸ் குறையாத அளவிற்கு படத்தை உருவாக்கி அசத்தி இருப்பார். இதில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுனை வைத்து படத்தின் கதையில் மிரட்டி இருப்பார். அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் பிரேம்ஜி கூறும் "என்ன கொடுமை சார்" என்ற டயலாக்கும், நடிகர் அஜித் " MONEY MONEY MONEY"என்று கூறும் டயலாக்கும் இன்றளவும் ஃபேமஸ்.

அதனைத் தொடர்ந்து அவர் எடுத்த 'பிரியாணி' படத்திலும் நடிகர் கார்த்திக் மற்றும் ஹன்சிகாவை வைத்து காமெடி படமாக உருவாக்கி இருப்பார். இப்படத்தில் இடம்பெற்று இருக்கும் குறிப்பிட்ட பாடலை அனைத்து இசையமைப்பாளர்களும் சேர்ந்து பாடி இருப்பது இப்படத்தின் பெருமைகளுள் ஒன்று.

இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய, "மாநாடு" திரைப்படம் இன்றளவும் மக்களால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அதில் மீண்டும் பழைய தோற்றத்தில் அவதாரம் எடுத்திருந்த நடிகர் சிம்புவை தனித்துவமாக காண்பித்து, எஸ்.ஜே சூர்யாவை வில்லனாக மாற்றி அசத்தி இருப்பார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா கூறும் "வந்தான்...சுட்டான்...செத்தான்...ரிப்பீட்டு" என்ற வார்த்தை இன்றளவும் இளசுகள் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இப்படி அனைத்து படங்களிலும் தன்னுடைய மேஜிக்கை காண்பித்திருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இத்தனை படத்திற்கும் ஆணிவேராய் அமைந்த படம் என்றால் அது தான் "சென்னை 600028". இந்தப் படத்தைப் பற்றி கூறாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எஸ்.பி.பி சரண் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஜெய், பிரேம்ஜி, அமரன், விஜய், வசந்த், சிவா உள்ளிட்ட பல நடிகர்களின் ஈடுபாட்டிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும், கிரிக்கெட், காதல், காமெடி, குடும்பம் என அனைத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட கமர்சியல் திரைப்படம் தான் இந்த சென்னை 600028.

இத்திரைப்படம் பலரது வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கிறது. இப்படத்தின் முதல் பாகம், இரண்டாம் பாகத்தை தொடர்ந்து தற்பொழுது இப்படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகப் போகிறது என்ற அப்டேட்டை கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இப்படம் உருவாக்கத்திற்க்கான அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதாகவும் கதைகளும் தயாரிப்பாளருக்கு பிடித்ததாலும் படப்பிடிப்பு பூஜைக்கான தேதிகளை இயக்குனர் வெங்கட் பிரபு பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இப்படத்திற்கான அப்டேட்டுகள் வெளிவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என் எக்ஸ் தளத்தை ஹேக் பண்ணிட்டாங்க... எலான் மஸ்குக்கு கோரிக்கை வைத்த இசையமைப்பாளர் டி.இமான்..!