"ஏற்கனவே அவங்களுக்கும் நமக்கும் வாய்க்கா வரப்பு தகராறு இருக்கு" என்று சொல்வதற்கு ஏற்ப எக்ஸ் தளத்தை எப்பொழுது எடுத்து பார்த்தாலும் அதில் சினிமா மட்டும் அல்லாது பல அரசியல் தலைவர்களையும் வம்பிழுத்து வருகிறார் பிரபல ரிவியுவரான ப்ளூ சட்ட மாறன். ஏற்கனவே விஜயின் சைவ உணவு முறை என இவர் பதிவிட்ட பதிவுக்கு பல எதிர்ப்புகளும் கண்டனங்களும் விஜய் ரசிகர்களிடம் இருந்து வந்தாலும் அதனை குறித்து துளி கூட கவலை படாத ப்ளூ சட்டை மாறன், தனது அடுத்தடுத்த பதிவுகளை விஜய்க்கு எதிராக பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் விஜய்க்கு எதிராக ப்ளூ சட்டை மாறன் பதிவிட்ட பதிவில், "தவெக கட்சி நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் சைவம் மட்டுமே பரிமாறப்படுகிறது. இன்று இரண்டாம் ஆண்டு துவக்க விழாவிலும் சைவம் தான். மற்ற கட்சிகள் பெரும்பாலும் சைவம் அசைவம் என இரண்டையும் பரிமாறுவது வழக்கம்.
கலந்து கொள்பவரில் எத்தனை பேர் சைவம், எத்தனை பேர் அசைவ உணவை விரும்பகிறார்கள் எனும் பட்டியலை சில தினங்களுக்கு முன்பே தயார் செய்து விடுவார்கள். தனது மேலிடத்துக்கு உணவு கொள்கையை தவெக தொண்டர்கள் மற்றும் ஊக்கத்தொகை பெற வரும் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரின் மீது திணிக்கிறாரா விஜய்?" என ப்ளூ சட்டை மாறன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.இது சர்ச்சைகளுக்குள் ஆனது.
இதையும் படிங்க: நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் "லுக் டெஸ்ட்" காட்சிகள் வெளியாகி உள்ளது..!

இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சியை சார்ந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசும்பொழுது திமுகவையும் மோடியையும் மிகவும் அதிகமாக சாடி பேசி இருந்தார். அவர் பேசிய வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி விமர்சனத்திற்குள்ளானது. இந்த சூழலில், தற்பொழுது விஜயை குறித்து ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவில், ரெண்டு பேரும் ரகசிய கூட்டணி வச்சி.. நாடகம் போடறாங்க என திமுக - பாஜக குறித்து கொக்கரித்தார் விஜய். ஆனால், EPS, செங்கோட்டையன் டெல்லி செல்கிறார்கள். அமித் ஷாவை சந்திக்கிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிறது. வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித்துள்ளார் 'ஒரே ஒரு குருக்கள் ' ஜி.கே.வாசன். வாக்கெடுப்பை புறக்கணித்து எஸ்கேப் ஆனார் அன்புமணி.
வாக்கெடுப்பு நடந்த நாளில் டெல்லி சென்ற இளையராஜா.. வாக்களித்தாரா இல்லையா என்பது மர்மமாக உள்ளது. இஸ்லாமியர்களை பாதிக்கும் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிப்பதில் இவர்களுக்கு என்ன சிக்கல்? தமிழக மக்களிடம் கெட்ட பெயர் வரக்கூடாது. மேலிடத்தையும் பகைத்துக்கொள்ள கூடாது எனும் இரட்டைவேடம்தானே இது? இன்று சென்னையில் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்ததாக செய்தி வந்துள்ளது.

இதில் ஒன்றுகூட பனையூர் பண்ணையாரின் கண்களுக்கு தெரியவில்லையா? இவர்கள் எல்லாரும் போடும் நாடகத்திற்கு என்ன பெயர்? மைக் முன்பு தொண்டை கிழிய கத்துபவர்.. இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்? இவர்கள் எல்லாம் உங்கள் தீம் பார்ட்னர்கள் என்பதால்தானே. பெரிய சிஐடி சங்கர். ரகசிய கூட்டணியை கண்டுபுடிச்சி ஊருக்கு சொல்றாராம். இப்ப வாயை தெறங்க ப்ரோ. என மிகவும் காட்டமான பதிவை பகிர்ந்துள்ளார்.

தற்பொழுது இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், இவங்க இருவருக்கும் என்ன வாய்க்கா வரப்பு தகராறு இருக்கு என தெரியவில்லையே என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்..
இதையும் படிங்க: வெளியானது ஜனநாயகன் படத்தின் கதை.. மிரட்டும் வசனங்களை கொடுத்திருக்கும் ஹெச்.வினோத்...!