அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 6-ம் தேதி எழும்பூரில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் அக்கார்ட் டிஸ்டில்லர்ஸ் அண்ட் பிரேவர்ஸ் என்ற மதுபான நிறுவனத்தின் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தியது.
அன்றே, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ''ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு, இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்குக் கொண்டு வந்துள்ளது" என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை எக்ஸ் தளத்தில் விமர்சித்து இருந்தார்.

இதற்கு எதிர்வினையாயற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ''மும்மொழிக் கொள்கை திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம் ஆகியவற்றைத் திசை திருப்ப மத்திய அரசு, டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்துகிறது" என்று கூறியிருந்தார். இந்த நிலையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது குறித்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்து. இது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. எதிர்கட்சிகட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தவெக கட்சித் தலைவர் விஜய் காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.
இதையும் படிங்க: உங்க மொழிக் கொள்கை உறுதியை காட்ட 'ரூ' தேவையில்ல.. இதை செய்யுங்களேன்.. ராமதாஸ் பொளேர்.!

இந்த நிலையில் இந்த டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக இன்று சென்னை எழும்பூர் அருகே பாஜக சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால், அனுமதி இல்லை என்று கூறி போலீசார், பாஜகவினரை கைது செய்தனர். இந்த விவகாரம் பற்றி எரிந்து வரும் நிலையில், அரசியல் விமர்சகரும், மூத்த வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ்தளப்பதிவில், திமுக குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில், ''மு.க.ஸ்டாலின் இறுதியாக சில நல்ல வேலைகளைச் செய்துள்ளார். இது உத்தவ் தாக்கரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த அதே தவறு. இன்று தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான ஆட்சியா..? மதுபான கொள்முதல் ஊழல் மாஃபியாக்களுக்கான ஆட்சியா? என்ற நிலையில், உண்மையில் அவர்கள் இருவரும் அரசியலில் தங்களை விட தந்திரமானவர்கள்.
யாரும் பிறக்க மாட்டார்கள் என்று நினைத்தார்கள். காலம் பதில் அளிக்கும். ஸ்டாலினை அவரின்
குடும்பத்தாரை அதிமுகவில் இருந்து வந்த இன்றைய திமுகவினர் பாதுகாப்பார்கள்.
ஸ்டாலின் இறுதியாக சில நல்ல வேலைகளைச் செய்துள்ளார், இது உத்தவ் தாக்கரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த அதே தவறு. இன்று தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான ஆட்சியா? மதுபான கொள்முதல் ஊழல் மாஃபியாக்களுக்கான ஆட்சியா? என்ற நிலையில்….
உண்மையில் அவர்கள் இருவரும் அரசியலில் தங்களை விட…
— K.S.Radhakrishnan (@KSRadhakrish) March 17, 2025
2001 நினைவு உள்ளதா? அன்று நான் மட்டுமே அறிவாலயத்தில் இருந்தேன். இது முரசொலி மாறன் சொன்னது. Tailpiece: ஆதாரங்களை அளிக்க 'பா'ஸ்மாக் அலுவலகத்தை எரித்தாலும் எரித்து விடுவார்கள்... ஜாக்கிரதை'' என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: இது மக்கள் ஆட்சியா? மாஃபியா ஆட்சியா? வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பாஜக தலைவர்கள்.. அண்ணாமலை, ஹெச்.ராஜா கண்டனம்..!