ஏழைகளின் கண்ணீர், நாட்டு மன்னனைத் தண்டித்தே தீரும் அந்த தண்டனையிலிருந்து மோடி அரசு தப்ப முடியாது என விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி ரூ. 4,034 கோடியை தமிழ்நாட்டுக்கு தர மத்திய அரசு மறுத்து வருகிறது.நிதி தர மறுக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களைத் திரட்டி, தமிழகம் முழுவதும் தி.மு.கவினர்ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிதித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தின் போது, ஒன்றிய பா.ஜ.க.அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
அதில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “உங்களுக்கான வேலைக்குரிய சம்பளத்தையும் கொடுக்காத ஒரு ஆட்சி இருக்கிறது. அந்த ஆட்சியை கண்டிக்க வேண்டிய சூழலும் உருவாகி இருக்கிறது. உங்களுக்கான உழைப்புக்கான ஊதியம் வராமல் இருக்கிறது என்ற அந்த கவலையும் வருத்தத்தையும் இணைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மத்தியிலே இருக்கக்கூடிய பாஜக அரசாங்கம், தமிழ்நாட்டிற்கு எந்த அளவில் எல்லாம் வஞ்சனை செய்கிறது என்பதை நீங்கள் ஒவ்வொரு நாளும் உணர்ந்து இருக்கிறீர்கள். தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை நாம் கேட்கிற போதெல்லாம் சாக்கு போக்குகளை சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இன்றைக்கு அந்த நிதியை முற்றிலுமாக நமக்கு தர மறுக்கக் கூடிய காரணங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

100 நாள் வேலைத்திட்டம் என்பது, ஐக்கிய முன்னணினுடைய ஆட்சி காலத்தில், மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, காங்கிரஸ் ஆட்சியிலே கொண்டு வந்த காரணத்தால் அந்தத் திட்டத்தை முடக்க வேண்டுமென நினைக்கின்றனர். இந்தத்திட்டத்திற்கு காசு ஒதுக்கினால் அது என்றைக்கும் இருக்கும் என்பதற்காகவே அதற்கு நிதி கொடுக்கக் கூடாது. நிதியை நிறுத்தி விட்டால், திட்டம் நின்று விடும் என்பதற்காக கொடூர மனப்பான்மையோடு, ஒன்றியத்தில் உள்ள பாஜக அரசு நிதியினை விடுவிக்காமல் இருக்கிறது. 4034 கோடி ரூபாய் இன்றைக்கு தமிழ்நாட்டுக்கு மட்டும் வர வேண்டிய நிதியை இன்னமும் கொடுக்காமல் வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டும் அல்ல எங்கெல்லாம் பிஜேபி அரசு இல்லையோ, எங்கெல்லாம் எதிர்கட்சி அரசு இருக்கிறதோ, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை.
இதையும் படிங்க: கூட்டிக் கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்.. தப்புக் கணக்கு போடுவதாக கூறிய தங்கம் தென்னரசுக்கு எஸ்.பி. வேலுமணி பதிலடி,!!
ஒரு கோடி அல்ல 2 கோடி எல்லாம் 100 கோடி அல்ல 500 கோடி அல்ல, 4034 கோடி ரூபாய் இன்றைக்கு தமிழ்நாட்டுக்கு மட்டும் வர வேண்டிய நிதியை இன்னமும் கொடுக்காமல் வைத்துக் கொண்டிருக்கிறது. பிஜேபி ஆட்சியில் இருக்கக்கூடிய மாநிலங்களுக்கு இந்த நிதி போகிறது. ஆனால் பிஜேபி ஆட்சியிலே இல்லாத மாநிலங்கள், நம்முடைய திமுக ஆட்சியில் இருக்க கூடிய இந்த மாநிலம் முதலமைச்சர், தளபதி முக ஸ்டாலின் உடைய தலைமையில் இந்த மாநிலம் இருக்கிறது என்ற காரணத்திற்காக நிதியை ஒதுக்காமல் இருக்கிறார்கள்.

நாங்கள் நேரடியாக வேண்டி கேட்டோம். தயவுசெய்து பணம் கொடுங்கள் என்று முதலில் நாங்கள் கேட்கிறபோது 2500 கோடி ரூபாய் இருந்த அந்த நிலுவைத் தொகை இன்றைக்கு நான் செங்குன்றாபுரத்தில் பேசிக் கொண்டிருக்கிற போது 4000 கோடியை தாண்டி இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் கொஞ்சம் யோசிச்சு பாருங்க, 4000 கோடி ரூபாய் உங்களுக்காக வரக் கூடிய இந்த பணத்தை ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய பணத்தை தராமல் வஞ்சிக்கிறது என்று சொன்னால் அந்த சம்பளப் பணத்தை கேட்டு உரிமைக்குரல் எழுப்பக்கூடிய அந்தத் திறன் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சருக்கு இருக்கிறது.
நீங்க அதுக்கு எல்லாம் கூட பணம் கொடுக்கல இன்னும் கூட சொல்ல வேண்டும் என்றால் நம்முடைய பிள்ளைகளுக்காக கொடுக்க வேண்டிய பணம். சாத்தூரிலே எரிச்சநத்திலே நம்முடைய பிள்ளைகள் படிக்கிறார்கள் அல்லவா அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணம். அங்க இருக்க கூடிய வாத்தியார்களுக்கு கொடுக்கக்கூடிய சம்பள பணம் அந்த பணம் 3000 ரூபாய் ரூபாய்க்கு ஏன் கொடுக்கவில்லை. இந்தி மொழி ஏற்றுக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டையே படிக்கக்கூடிய பிள்ளைகள், இந்தி மொழி படித்தால் தான் அந்த பணத்தை கொடுப்போம் என்று சொன்னார்கள். நாங்கள் சொன்னோம், ஒரு சுமையை கூடுதலாக ஒரு மொழியை படிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

நீங்கள் 3000 கோடி ரூபாய் நீங்கள் இந்தி படித்தால் தான் கொடுப்பேன் என்று சொன்னால் அது எங்களுக்கு தேவையில்லை என்று நாங்கள் சொன்னோம். அதே போல உங்கள் சம்பளம் 4000 கோடி ரூபாய் சம்பளத்தை தொடர்ந்து நாம் வலியுறுத்தியும் நாம் கேட்டும் கொடுக்காத ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது.
அந்த ஆட்சியை கண்டிக்க கூடிய குரல் உங்களுடைய வயிற்றிலே அடிக்கக்கூடிய இந்தச் செயல். இந்த செயலை கண்டித்து எழுப்பக்கூடிய குரலாக இருக்கும் ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் ஒக்கும் என்று சொன்னார்கள். ஒரு ஏழையின் கண்களில் இருந்து வரக்கூடிய கண்ணீர் நாட்டினுடைய மன்னiனைத் தண்டித்தே தீரும். அந்த தண்டனையிலிருந்து மத்தியில் இருக்கும் மோடி சர்க்கார் தப்பிக்க முடியாது. பெண்களின் தண்ணீருக்கும் அவாலாதிக்கும்,
இந்த சர்க்கார் நிச்சயமாக பதில் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: அவுரங்கசீப்பே தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை… வடக்கனுக்கு வாய்ப்பு கிடைத்து விடுமா? மார்தட்டும் தங்கம் தென்னரசு..!