அமெரிக்க அரசாங்கத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கடந்த வாரம் என்ன மாதிரியான பணியைச் செய்தீர்கள் என்பதை 48 மணி நேரத்துக்குள் மின்அஞ்சல் செய்யாவிட்டால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், அதிபர் ட்ரம்ப் அரசில் செலவு குறைக்கும் பிரிவு, திறன்வளர்ப்பு பிரிவின் அமைச்சராக இருந்து வருகிறார். அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு மஸ்க் அனுப்பிய இந்த மின்அஞ்சல் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தொடர்ச்சியான வழிகாட்டலின்படி, அமெரிக்காவின் அனைத்து அரசு ஊழியர்களும் விரைவில் ஒரு மின்அஞ்சலை பெறுவார்கள். அதில் அனைத்து ஊழியர்களும் கடந்த வாரம் என்ன வேலை செய்தீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். இதை தெரிவிக்காவிட்டால் பதவியிலிருந்து விலக வேண்டியதிருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எலோன் மஸ்க் அதிகாரமில்லா வெறும் ஊழியர்தான்... வெள்ளை மாளிகை விளக்கம்..!
அமெரிக்க அரசில் இருக்கும் ஊழியர்கள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், சிறைத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் 3 வரியில் மின்அஞ்சல் வந்துள்ளது. அதில், “ தயவுசெய்து இந்த மின்அஞ்சலுக்கு 5 வார்த்தைகளில் விடையளியுங்கள். கடந்த வாரம் என்ன பணி செய்தீர்கள்,என்பதை எங்களுக்கும் உங்கள் மேலாளருக்கும் காப்பி வைத்து எங்களுக்கு அனுப்புங்கள். திங்கள்கிழமை இரவு மணி 11.59க்குள் பதில் வரவேண்டும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கின் இந்த உத்தரவு குறித்து தேசிய வானிலை மையம், வெளியுறவுத்துறை மற்றும் நீதிமன்ற அமைப்பு உள்ளிட்ட பல நிறுவனங்களில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த செய்தியின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் பணியில் சனிக்கிழமை இரவு மூத்த அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த மின்அஞ்சலுக்கு பதில் அளிக்க வேண்டாம் என தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.
அமெரிக்க அரசில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள ஏற்கெனவே வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர், இதில் பலர் நீக்கப்பட்டுள்ளனர், பலர் தாமாகவே வேலையிலிருந்து விலகினர். மிகப்பெரிய அளவில் வேலையாட்கள் குறைக்கப்படுவார்கள், லட்சக்கணக்கான கோடி டாலர்களை சேமிக்க வேண்டியுள்ளது என்று எலான் மஸ்க் நிர்வகிக்கும் துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அமெரிக்க அரசில் இதுவரை எத்தனை ஊழியர்கள் வேலையிருந்து நீக்கப்பட்டுள்னர் என்பது குறித்த அதிகாரபூர்வ கணக்கீடு ஏதும் இல்லை, ஆனால், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு, சுகாதாரத்துறை, மனித வளச் சேவை, வருவாய்துறை, தேசிய பார்க சேவை ஆகியவற்றிலிருந்து பணியாட்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதிபர் ட்ரம்ப் அரசு இதுபோன்று ஊழியர்களையும், தொழிலாளர்களையும் அச்சுறுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஏஎப்ஜிஇ அமைப்பின் தலைவர் எவர்எட் கெல்லி கூறுகையில் “அரசு ஊழியர்கள் அமெரிக்க மக்களுக்கு வழங்கும் முக்கியமான சேவைகள் மீதான முழுமையான வெறுப்பை டிரம்ப் மற்றும் மஸ்க் வெளிப்படுத்துகிறார்கள். மூத்த அதிகாரிகள் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின்பும் பணிக்குத் திரும்பி ஆயிரக்கணக்கில் பணியாற்றி வருகிறார்கள் அவரை அவமானப்படுத்தும்விதத்தில் கொடூரத்தன்மை வெளிப்படுத்துகிறது. இந்த உத்தரவுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றம் செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒபாமா ஓரினச்சேர்க்கையாளர்..! மனைவி மிஷெல் சேலை கட்டிய ஆண்.. ! எலான் மஸ்க் தந்தையின் கேவல பேச்சு..!