குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் அணிந்திருக்கும் ஒரு சட்டையின் விலையை கேட்ட ரசிகர்கள் வாயடைத்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். விடாமுயற்சியில் ரசிகர்களின் அப்லாசை அள்ளிய அஜித்- த்ரிஷா ஜோடி இதிலும் கலக்கலாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
வித்யாசமான கேரக்டரில் நடிக்க நினைத்த அஜித்துக்கு ஆதிக் ரவிச்சந்திரன் கலக்கலான கமர்ஷியல் படத்தை கொடுத்துள்ளார். நேற்று முன் தினம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட செய்தது. 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்த குட் பேட் அக்லி படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. படத்தின் ரீசரில் பல கெட்டப்களில் தோன்றும் அஜித் தனது ஸ்டைலிஷான நடிப்பில் மாஸ் காட்டியுள்ளார்.

இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் அணிந்திருக்கும் சட்டை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. டீசரில் அஜித் கலஃபுல்லான சட்டை ஒன்றை அணிந்திருப்பார். அதை பார்த்த ரசிகர்கள் அந்த சட்டை குறித்து இணையத்தில் தேடியுள்ளனர்.
இதையும் படிங்க: என்னா மனுஷன் சார்... கார் ரேஸுக்கு முன்பு அஜித் செய்த செயல்... நெகிழ்ந்து போன ரசிகர்கள்...!
அதாவது குட் பேட் அக்லி படத்தில் அஜித் அணிந்திருக்கும் சட்டையின் விலை ரூ.1,80 லட்சம் என கூறப்படுகிறது. ஒரே ஒரு சட்டை இத்தனை கோடியா என கேட்கும் ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர். படத்தின் ரிலீஸ் போது அதே கெட்டப்பில் வரும் ரசிகர்கள் எப்படியாவது அதே டிசைன் ஷர்ட்டை அணிந்து வரவேண்டும் என்று இப்போதே விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போவதாக வெளியான தகவலுக்கு ரசிகர்கள் எதிர்மறை கருத்துகளை பதிவிட்டனர். ஆதிக் ரவிச்சந்திரன் எப்படி அஜித்துக்கான கதை களத்தை அமைப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், டீசரை பார்த்ததும் ஒவ்வொரு காட்சியிலும் அஜித்தை ஆதிக் ரசிச்சந்திரன் செதுக்கி இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தலைக்குப்புற கவிழ்ந்த கார் ... மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்குமார்...!