கேரளாவின் தேரட்டம்மலில் உள்ள அரிகோடு அருகே ஏழு பேர் கொண்ட கால்பந்து போட்டியின் போது ஒரு சோகமான சம்பவம் நடந்தது. போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு, திடீரென பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியதால், நிரம்பியிருந்த மைதானத்தில் குழப்பம் ஏற்பட்டது. பட்டாசுகள் தவறாக வெடித்ததால், மைதானத்திற்குள் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், போட்டியைக் காண வந்திருந்த பலர் காயமடைந்தனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது, பட்டாசுகள் அரங்கம் முழுவதும் திடீரென பரவியது. இந்த திடீர் சம்பவத்தால், போட்டியைக் காண வந்திருந்த பார்வையாளர்களுக்கு மத்தியில் என்ன நடக்கிறது என்கிற குழப்பம் ஏற்பட்டது. பார்வையாளர்கள் மத்தியில் பட்டாசுகள் எரியத் தொடங்கியபோது அது இன்னும் பயங்கரமாக சம்பவமாக மாறியது. இதில் சிக்கிய பல ரசிகர்கள் மோசமாக தீயில் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில், காயமடைந்த பார்வையாளர்கள் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

தேரட்டம்மலில் கால்பந்து போட்டியின் போது நடந்த இந்த விபத்து, சீன பட்டாசுகளால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து ஏதேனும் தவறால் நடந்ததா? அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து இப்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.ஏனென்றால், அங்கு நிலைமையை சரியான நேரத்தில் கையாளமல் போயிருந்தால், இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கும். இது தவிர, பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா? இல்லையா? என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி.. உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை..!
அங்கு நடைபெற்றது ஏழு பேர் கொண்ட கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி. இந்த இறுதிப் போட்டிக்குப் பிறகு நிறைவு விழாவிற்கு வாணவேடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட இருந்தன. இறுதிப் போட்டி யுனைடெட் எஃப்சி நெல்லிக்குத் மற்றும் கேஎம்ஜி மாவூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதையும் படிங்க: தலைவிரித்தாடும் ராகிங் கொடுமை! பிறப்புறுப்பில் காம்பஸால் குத்தி.. கொடூரமாக சித்ரவதை செய்த சீனியர்கள்.!