2006-ம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். கிரீடம், பொல்லாதவன், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், சூரரைப் போற்று என பல படங்களுக்கு இசையமைத்து முக்கியமான இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

2015-ம் ஆண்டு டார்லிங் திரைப்படம் மூலம் கதாநாயகனாகவும் தனது பாதையை தொடங்கினார். தொடர்ந்து த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை, டியர், பேச்சிலர், பென்சில் போன்ற படங்களில் கதாநாயகனாகவும் வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க: என்ன இப்படி பண்ணிட்டீங்களே டைரக்டரு.. கிங்ஸ்டன் படம் பார்த்தவர்களை கதிகலங்க வைத்த படக்குழு..!


தனது பள்ளித்தோழியும் பாடகியுமான சைந்தவியுடன், ஜி.வி.பிரகாசுக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. ஜி.வி.பிரகாஷ், நடிகராக மாறிய பின்னர் கடந்த சில ஆண்டுகளாக கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாகவும் பேசப்பட்டது.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் விவாரகத்துக் கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. சென்னை முதலாவது கூடுதல் குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி செல்வசுந்தரி முன்பு இருவரும் விசாரணைக்கு ஆஜரானார்கள். எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி இருவரும் மனமுவந்து பிரிவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து இருவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: சீறிப்பாய்ந்து வரப்போகும் 'வாடிவாசல்' திரைப்படம்.. அட்டகாச அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!