மலையாள நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாரனுக்கு, அவரது முந்தைய திரைப்படங்களின் நிதி விவரங்கள் மற்றும் ஊதியம் தொடர்பாக வருமான வரித் துறை முறையான நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டிசம்பர் 15, 2022 -ல் பிருத்விராஜ், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், திரைப்படத் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை விரிவான ஆய்வு நடத்தியது. அதன் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்குப் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த நோட்டீஸ் மோகன்லால் நடித்த எம்புரான் படத்துடன் தொடர்புடையது அல்ல. நடிகராகவோ அல்லது இயக்குநராகவோ ஈடுபட்ட முந்தைய படங்களுடன் தொடர்புடைய ஊதியம் , நிதி பரிவர்த்தனைகளுடன் மட்டுமே தொடர்புடையது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: 'எம்புரான்' பட சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட மோகன்லால்.. வருத்தம் தெரிவித்து பதிவு.!!
அவர் முன்பு நடித்த மூன்று படங்களுக்கான ஊதிய விவரங்கள் குறித்து விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடுவ, ஜனகணமன, கோல்ட் ஆகிய படங்களில் நடித்ததற்காக எந்த ஊதியமும் பெறவில்லை என்றும், தயாரிப்பு கூட்டாளியாக பணம் பெற்றதாகவும், இது தொடர்பாக விளக்கம் கோருவதாகவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோட்டீஸ் வெளியிடுவது நிலுவையில் உள்ள மதிப்பீடுகளை முடிப்பதற்கும், வருமான வரி விதிமுறைகளுக்கு இணங்குவதைச் சரிபார்ப்பதற்கும் நடைமுறையின் ஒரு பகுதி. கடந்த காலப் படங்களின் தயாரிப்பு, வெளியீட்டின் போது பிருத்விராஜ் பெற்ற ஊதியம் குறித்து வருமான வரித்துறை விரிவான விளக்கங்களைக் கோரியுள்ளது.

எம்புரான் படத்தயாரிப்பாளர் கோபாலனுக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் நேற்று அமலாக்க இயக்குநரகம் திடீர் சோதனை நடத்தியது. இது தொடர்பாக கோகுலம் குழுமத்தின் தலைவரான கோபாலன், நடந்து வரும் விசாரணைகள் தொடர்பாக கூடுதல் விசாரணைக்காக அழைக்கப்படலாம்.
இதையும் படிங்க: எல்2 எம்பூரான் படத்திற்கு மோகன்லால் வாங்கிய சம்பளம்..! மஞ்சு வாரியருக்கு இவ்வளவுதான் சம்பளமா..?