விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு, அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். மேலும் இதில் பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படம் 2025ஆம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக உள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியான 12 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளை கடந்தது. இரண்டு வாரங்களில் 3.5 கோடி பார்வையாளை எட்டியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் இந்த மாத இறுதிக்குள் ட்ரெய்லரும் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இதுதாண்டா OG சம்பவம்… தெறிக்கவிட்ட குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!!

அவர் அந்தப் பேட்டியில், குட் பேட் அக்லி ஆகிய மூன்று கேரக்டர்கள் அனைவருக்குள்ளேயே இருக்கும். இந்த உலகம் நம்மிடம் நன்றாக நடந்துகொள்ளும்போது நாம் குட்டாக இருப்போம். பேடாக நடக்கும்போது அக்லியாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதுதான் இந்தப் படத்துடைய ஒன்லைன். இது வெறும் ஆக்ஷன் படமாக மட்டுமில்லாமல் எமோஷன் கலந்திருக்கும் படமாகவும் இருக்கும். அப்பா - மகனுக்கிடையேயான எமோஷன் ரசிகர்களிடம் நன்றாக ஒர்க் அவுட் ஆகும் என்று நம்புகிறேன். இந்தப் படத்துக்கான டைட்டிலை அஜித்தான் கொடுத்தார். அவர் இந்த பெயரை கொடுத்தது ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தப் படத்தில் பில்லா, தீனா படங்களின் கெட்டப்புகளில் அஜித் வருவார். கடுமையான டயட்டை இந்தப் படத்துக்காக கடைபிடித்தார். அவர் ரெட் டிராகன் என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். ஒரு நடிகராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் அவர் செய்திருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தை அவரிடம் சொன்னதுமே ஓகே சொல்லிவிட்டார். அவரை போல் மன உறுதி கொண்ட நபரை பார்ப்பது அரிது.
விடாமுயற்சி ஷூட்டிங்கிலிருந்து நேராக இந்த பட ஷூட்டிங்கிற்கு வருவார். வரும் வழியில் மட்டும்தான் தூங்குவார். அப்படித்தான் அவர் 72 நாட்களில் இந்தப் படத்தை நடித்துக்கொடுத்தார் என்றார். இவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஆத்தாடி...! அஜித் போட்டிருக்கும் இந்த சட்டையின் விலை இவ்வளவா?... அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?