கிரிப்டோகரன்சி மோசடி புகாரில் சிக்கியுள்ளதாக வெளியான தகவல் குறித்து நடிகை தமன்னா விளக்கம் அளித்துள்ளார். தமிழ், இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா மீது எழுந்துள்ள பண மோசடி புகார் திரைத்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. லாஸ்பேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரான அசோகன்(70) கிரிப்டோ கரன்சியில் ஆன்லைன் ஆப் மூலம் ரூ.98 லட்சம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.
இது குறித்து அசோகன் புதுச்சேரி சைபர் கிரைமில் புகார் அளித்தார். அதன்படி விசாரணையில் ஈடுபட்ட போலீசார் நித்திஷ்குமார் ஜெயின், அரவிந்த்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இந்தியா முழுவதும் பலரை ஏமாற்றி ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர்.

இந்த கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் கோவை, மாமல்லபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மோசடி பணத்தில், கோடிக்கணக்கில் செலவு செய்து பிரமாண்ட விழாக்களை நடத்தியுள்ளனர். இதில் சினிமா நடிகைகளான தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பிரபலங்களை அழைத்து வந்து விழாவை சிறப்பித்துள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்பளமும் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலீஸ் பிடியில் தமன்னா,காஜல் அகர்வால்...பல கோடி ரூபாய் மோசடியில் சிக்கிய பின்னணி..!

இந்நிலையில் மோசடி கும்பலின் வங்கி பரிவர்த்தையை ஆய்வு செய்தபோது நடிகைகளுக்கு பணம் அனுப்பப்பட்டத்தை பார்த்த போலீசார் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக என்ற கோணத்தில் சந்தேகப்பட்டனர். மேலும் தொடர்புடைய தமன்னா, காஜல் அகவர் உள்ளிட்டோருக்கு விசாரணை தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமன்னா, “கிரிப்டோகரன்ஸி மோசடியில் என்னை தொடர்பு படுத்தி செய்திகள் வெளியாகிறது. இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: போலீஸ் பிடியில் தமன்னா,காஜல் அகர்வால்...பல கோடி ரூபாய் மோசடியில் சிக்கிய பின்னணி..!