அதாவது ரேவதியின் தோழி அவளை பார்த்து விடுகிறாள். பிறகு தனது கணவரை அறிமுகம் செய்து வைக்கிறாள். மேலும் உனக்கே இப்போ கல்யாண ஆச்சு உன் கணவர் எங்கே என்று கேட்க ரேவதி கார்த்தியை கூப்பிட்டு தனது கணவன் என அறிமுகம் செய்து வைக்கிறாள்.
அதன் பிறகு ரேவதியின் தோழி பார்த்து ரொம்ப நாளாச்சு வெளியே எங்கேயாவது போலாமா என்று கேட்கிறாள். இந்த சமயத்தில் கார்த்திக் இங்கு இல்லாத நிலையில் ரேவதி ஏன் கணவருக்கு வேலை இருக்கு என்று சொல்லி விடுகிறாள்.
அதன் பிறகு கார்த்திக் அங்கு வர ரேவதி நேரடியாக கார்த்தியிடம் வெளியே போலாமா? உங்களுக்கு வேலை இருக்கா என்று கேட்க கார்த்திக் போலாமே நான் ப்ரீ தான் என்று சொல்லி விடுகிறான். இதனால் ரேவதி கார்த்தியிடம் ஏன் வேலை இருக்குன்னு சொல்ல வேண்டியது தானே என்று கோபப்படுகிறாள்.
இதையும் படிங்க: Karthigai Deepam: மாயா சதியால் - சிக்கலில் ரேவதி! கண்டுபிடிப்பான கார்த்திக்? கார்த்திகை தீபம் அப்டேட்!

அதன் பிறகு இவர்கள் எல்லோரும் வெளியே சாப்பிட வருகின்றனர். அப்போது நீங்க ரெண்டு பேரும் எங்க மீட் பண்ணீங்க என்று கேள்வி கேட்க கார்த்தி நான் உங்க வீட்டில டிரைவரா வேலை பார்த்தேன் என்று சொல்கிறான்.
அதைத்தொடர்ந்து கார்த்திக் ரேவதிக்காக சொட்டர் ஒன்றை வாங்கி கொடுக்க ரேவதி அவர்களுக்கு முன்னால் மறுக்க முடியாமல் வாங்கி கொள்கிறாள். இந்த சமயத்தில் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையின் மீது கார் மோதி விட கார்த்திக் ஓடிப் போய் அந்த குழந்தைக்கு முதல் உதவி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
இதையும் படிங்க: சந்திரகலாவுக்கு ஷாக் கொடுத்த கார்த்தி? ஹனி மூன் செல்லும் ரேவதி - கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட் !