அதாவது சாமுண்டீஸ்வரி சொல்லியபடியே, அவளது தோழி வெளிநாட்டிலிருந்து வருகிறார். வீட்டுக்கு வந்ததும் சந்திரகலா எப்படி இங்கிலீஸ்ல தான் பேசுவாங்க, இந்த டிரைவர் ராஜா திருதிருவென முழிக்கப் போறான் என வேடிக்கை பார்க்கிறாள்.
அதேபோல் வெளிநாட்டில் இருந்து வந்தவர் ஆங்கிலத்தில் பேச கார்த்தி சரளமாக ஆங்கிலத்தில் பேசி தனது வாழ்க்கையில் பாதி தனது மனைவி என ரேவதி என சொல்லி கார்த்தி மனைவியை அறிமுகம் செய்ய சந்திரகலா ஷாக் ஆகிறாள். எப்படி இவ்வளவு சரளமாக இங்கிலீஷ் பேசுறீங்க என்று எல்லோரும் கேள்வி கேட்க மயில்வாகனம் அவன் வெள்ளைக்காரன் ஒருத்தன் கிட்ட டிரைவராக வேலை பார்த்து இருக்கான் என்று சொல்லி சமாளிக்கிறான்.

அதன் பிறகு வெளிநாட்டிலிருந்து வந்தவர், கார்த்திக் ரேவதிக்கு திருமண கிப்டாக ஹனிமூன் டிக்கெட், அவர்கள் தங்க ஹோட்டல் ரூம், பிளைட் டிக்கெட் என எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு கிளம்ப சாமுண்டீஸ்வரி ஹனிமூன் போக சொல்ல ராஜா அதெல்லாம் சரியா வராது அத்தை என்று சொல்கிறான். சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் நான் பேசுகிறேன் என்று சொல்லி ரேவதியிடம் விஷயத்தை சொல்ல அவன் மறுப்பு தெரிவிக்காமல் சம்மதம் சொல்கிறாள்.
இதையும் படிங்க: சாமுண்டீஸ்வரியால் கடுப்பாகும் ரேவதி? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
ராஜராஜன் ஆச்சரியப்பட கார்த்திக் அம்மாவோட டார்ச்சரில் இருந்து தப்பிக்க ரேவதி சம்மதம் சொல்லி இருப்பதாக சொல்கிறான். அடுத்து சந்திரகலா மாயாவுக்கு போன் போட்டு இங்கு நடக்கும் விஷயத்தை சொல்லி ஏதாவது பண்ணி இதை தடுத்து நிறுத்து என்று சொல்கிறாள். 
அடுத்து கார்த்தி ரூமுக்கு வர உங்க அம்மாவோட தொல்லையிலிருந்து தப்பிக்க தானே ஹனிமூன் பார்க்க சம்மதம் சொன்னிங்க என்று கேட்க இதெல்லாம் சரியா தெரிந்து வைத்திருக்க என ரேவதி பதில் சொல்கிறாள். பிறகு கார்த்திக் நான் வெளியில் படித்துக் கொள்கிறேன் என்று வெளியே செல்ல ரேவதி நீங்க வெளியே போனா உங்க அத்தை மனசு கஷ்டப்படும் நீங்க கட்டிலில் படுத்துக்கோங்க.. நான் தரையில் படுத்துகிறேன் என்று சொல்ல கார்த்திக் தரையில் படுத்துக் கொள்கிறான்.
அதன் பிறகு மாயா ரேவதிக்கு போன் செய்து உன்னை நேரில் பார்க்கணும் என்று சொல்ல ரேவதி சந்திக்கலாம் என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்பதை பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஷாக் கொடுத்த சாமுண்டீஸ்வரி... பதறும் அபிராமி.. என்ன நடந்தது? கார்த்திகை தீபம் அப்டேட்!