இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா தான். "அன்னக்கிளி" என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இளையராஜா. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 1000த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து உள்ளார். அதேசமயம், இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான "பத்ம விபூஷண்" விருது 2018ல் இவருக்கு வழங்கப்பட்டது. இத்தனை பெருமைகளுக்கும்,பாடல்களுக்கும் சொந்த காரனான இவரது பாடல்களை கேட்க முடியும் ஆனால் உபயோகிக்க முடியாது. அப்படி செய்தால் உடனே காப்பி ரைட்ஸ் போடுவார். இசையில் அதிக மென்மையாக இளையராஜாவிடம் பேசும் போது கொஞ்சம் பார்த்தே பேச வேண்டும் என்பர். ஒரு நிகழ்ச்சியில் பாட்டில் லட்சுமியே இல்ல சாமி என ரஜினியிடம் இளையராஜா சொல்ல, பதிலுக்கு ரஜினி அதுதான் லட்சுமி நோட்டா (பணம்) வருதே என சொல்லி கிண்டலடித்து இருப்பர். இது போல நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள, சங்கரின் மருமகளும் சர்வதேச இசை பள்ளியின் நிறுவனருமான "அஹ்லாயூ வாவ்" நான் இன்று இசையில் குருவாக இருக்க காரணம் எனது அப்பா தான். அவருக்கு இசையின் மீது இருந்த காதல் எனக்கும் வந்து விட்டது. அதனால் தான் இசை குறித்து இன்றளவும் பல விஷயங்களை தெரிந்து கொள்ள படிக்கிறேன். ஏனெனில் குருவாக இருக்கும் நான் மாணவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க கூடிய அளவிற்கு அனைத்து விஷயங்களையும் தெரிந்தவராக இருக்க முயற்சி செய்வதோடு நன்றாக சொல்லிக் கொடுப்பவராக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொண்டு 2004 ஆம் ஆண்டு சிறு கலக்கத்துடன் இசைப்பள்ளியை ஆரம்பித்தேன். ஆனால் இன்று சர்வதேச இசை பள்ளியாக வளர்ந்துள்ளது என்கிறார்.
இதையும் படிங்க: தயாராகிறது த்ரிஷ்யம் மூன்றாம் பாகம்..! உறுதி செய்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்...!

அதுமட்டும் இல்லாமல், இது ஒன்றும் எனக்கு புதிய பள்ளி அல்ல, காரணம் என் அப்பாவின் பெயர் ஆர் வெங்கடேசன். சினிமா துறையில் அவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட என் அப்பாவும் இசைஞானி இளையராஜா அவர்களும் நல்ல நண்பர்கள். அதனாலே இருவரும் சேர்ந்து என் அப்பா பெயரில் 1980ல் இசைப்பள்ளியை தொடங்கினார்கள். இந்த நிலையில், அதில் ஏற்பட்ட நஷ்டம் என் அப்பாவின் மீது விழுந்தது. அதனை சமாளிக்க முடியாமல் திணறிய அவர், எல்லா சொத்துக்களையும் இழந்து, கடைசியாக கரண்ட் கூட இல்லாத ஒரு சின்ன ஓலைகுடிசையில் இருந்தோம், இதனால் மனம் உடைந்த எனது தந்தை பத்து வருடமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆனால், அந்த வீட்டிற்குள், அவரை சுற்றி நிறைய புத்தகங்கள் இருந்து கொண்டே இருக்கும். நான் பள்ளி முடிந்து வீட்டுற்கு வந்ததும் அவர் படித்ததை பற்றி என்னிடம் அதிகம் பகிர்ந்து கொள்வார். அந்த அளவிற்கு மன அழுத்தத்தில் இருந்தார்.

பத்து வருடத்திற்கு மேலாக நன்றாக வாழ்ந்த எங்களுக்கு கரண்ட் கூட இல்லாத ஓலை வீடு தான் அடைக்கலமாக இருந்தது. ஆனால் இன்று பெரிய வீடு, ஏசி, பேன், கார் என அனைத்து ஆடம்பர வாழ்க்கையும் எனக்கு கொடுத்தது நான் நம்பிய நான் கற்று கொண்ட இசைதான். ஆதலால் சொல்லுகிறேன் இசையை நம்பினால் இசை உங்களை கைவிடாது என கூறினார்.
இதையும் படிங்க: எடுத்த படம் எல்லாம் ஹிட்டு.. தோல்வியா என்னக்கா நெவர்.. யார் அந்த இயக்குநர்..?